

சென்றவாரத் தொடர்ச்சி
..
"மருந்தறியேன் மணியறியேன் மந்திரமொன் றறியேன்
மதியறியேன் விதியறியேன் வாழ்க்கை நிலை யறியேன் திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்கும் திறத்தினிலோ ரிடத்தே இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவு மறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
இருந்த திசை சொலவறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதுமறிந் திலனே'
இதுவும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமே.
"வானின் மேயவர்கள் சூர னாலிடர்கொள் போதி லேயவர்தம்
வாழ்வு சீரடைய வைத்தவன்
தேனி னோடுதினை பூண தாகவளி காடு மேவுமகள்
சீரு லாவுமெழில் சிந்தையின்
மேனி லாவஅவள் பால தாகமிகு மாலொ டேகியவன்
வேத வேள்விநனி காப்பவன்
ஆனை மாமுகவ னார்பி னேஉதய மான மாகுமரன்
ஆறு வீடுடைய நாதனே'
இது ஒன்பதின் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
"கொங்கு தங்கு கோதை யோதி மாத ரோடு
கூடி நீடும் ஓடை நெற்றி
வெங்கண் யானை வேந்தர் போந்து வேதகீத
நாத வென்று நின்று தாழ
அங்க பூவ மாதி யாய ஆதி நூலின்
நீதி யோதும் ஆதி யாய
செங்கண் மாலைக் காலை மாலை சேர்நர் சேர்வர்
சோதி சேர்ந்த சித்தி தானே'
இது பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
"பேரா தரிக்கும் அடியவர்தம்
பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும்
பேறுங் கொடுக்க வரும்பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா
சேரா நிருதர் குலகலகா
சேவற் கொடியாய் திருச்செந்துர்த்
தேவா தேவர் சிறைமீட்ட
செல்வா என்றுன் திருமுகத்தைப்
பாரா மகிழ்ந்து முலைத்தாயர்
பரவிப் புகழ்ந்து விருப்புடன்அப்
பாவா வாஎன் றுனைப்போற்றிப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்
வாரா திருக்க வழக்குண்டோ
வடிவேல் முருகா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே'
இது பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். அரையடிக்கு இரண்டு மாவும் ஒரு காயும் உள்ள அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த அடிகளே மீட்டும் மடக்கி வந்தது இது. இத்தகைய விருத்தங்களை இரட்டையாசிரிய விருத்தங்கள் என்றும் கூறுவர்.
"துள்ளுமறி யாமனது பலிகொடுத் தேன்கர்ம
துட்டதே வதைகளில்லை
துரியநிறை சாந்ததே வதையா முனக்கே
தொழும்பனன் பபிடேகநீர்
உள்ளுறையி லென்னாவி நைவேத்தி யம்ப்ராணன்
ஓங்குமதி தூபதீபம்
ஒருகால மன்றிதுச தாகால பூசையா
ஒப்புவித் தேன்கருணைகூர்
தெள்ளுமறை வடியிட்ட அமுதப் பிழம்பே
தெளிந்ததே னேசீனியே
திவ்யரசம் யாவும் திரண்டொழுகு பாகே
தெவிட்டாத ஆனந்தமே
கள்ளனறி வூடுமே மெள்ளமௌ வெளியாய்க்
கலக்கவரு மானந்தமே
கருதரிய சிற்சபையி லானந்த ந்ருத்தமிடு
கருணாக ரக்கடவுளே'
இதுவும் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இதுவும் இரட்டை ஆசிரிய விருத்தம்.
(தொடர்ந்து பாடுவோம்...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கனடா பிரதமர் இந்தியா வருகை! மும்பையில் உற்சாக வரவேற்பு!

நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்! விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
வெல்லமண்டி என். நடராஜன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்!
இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! என்ன காரணம்?
வீடியோக்கள்
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

