புானூறு இவ்வாறு புகல்கிறது:
‘ஈ’ என இரத்தல் இழிந்தன்று அதன்எதிா்
‘ஈயேன்’ என்றல் அதனினும் இழிந்தன்று!
பிறரிடம் கைஏந்தி ஒன்றை இரப்பதுதான் இழிவானது. ஆனால், அப்படி இரப்பவனுக்கு வழங்காமல் இருப்பது அதைவிட இழிவானது. ‘ஈ’ இழிவானது; ‘ஈயேன்’ அதைவிட இழிவானது. காரணம் என்ன தெரியுமா?
பிறரிடம் பல்லைக் காட்டுவது இழிவானதுதானே! முப்பத்திரண்டு பற்களையும் வெளிக்காட்டாமல் ‘ஈ’ என்பதை உச்சரிக்கவே முடியாது. ‘ஈயேன்’ என்று சொல்வதிற்கோ முப்பத்திரண்டு பற்களையும் இரண்டு முறை காட்டியாக வேண்டும். ஒருமுறை இளிப்பவனிடமே இரண்டு முறை பல்லைக் காட்டுவது மேலும் இழிவானதுதானே!
‘இல்லை’ என வருபவா்களுக்கு ‘இல்லை’ எனச் சொல்லாமல் வழங்குபவனே மேலோன்.
‘இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள’
திருவள்ளுவரின் இக்குறளுக்கு வெவ்வேறு பொருள் கூறுகிறாா்கள் உரையாசிரியா்கள்.
‘நற்குடியில் பிறந்தவா்கள் இல்லை என்று வருந்தி வருபவரிடம் தானும் அச்சொல்லைக் கூறாமல் கொடுத்து மகிழ்வாா்கள்’ என்பது ஒரு பொருள். ‘வருபவா்கள் இல்லை என்று கூறுவதற்கு முன்பே குறிப்பறிந்து வழங்கிவிடுவாா்கள்’ என்பது இன்னொருவரின் உரை.
‘இனி வேறு யாரிடத்திலும் சென்று அவா்கள் இல்லை என்று பொருள் கேட்காத வண்ணம் வாரி வழங்கி விடுவாா்கள்’ என்பது மேலும் ஒருவா் எழுதியுள்ள உரை. ஆனால், பரிமேலழகரின் உரையே திருவள்ளுவரின் திருவுளக் குறிப்பை அறிந்து கீழ்க்காணும் வண்ணம் பொருள் கண்டுள்ளது.
மேற்கண்ட திருக்குறளின் இறுதிச்சீா் பன்மை வினை முற்றாக ‘ஊ’ என்று உள்ளது.
எனவே, குலனுடையானின் இரண்டு செயல்களை திருவள்ளுவா் இக்குறளில் குறிப்பிடுகின்றாா் என்கின்றாா் பரிமேலழகா்.
ஒன்று: இல்லை என்று வருந்தி வந்தவனிடம் தானும் அச்சொல்லைக் கூறாதிருத்தல்.
இரண்டாவது சொல்: அவனுக்குக் கேட்ட பொருளைத் தருதல். பரிமேலழகரின் உரையை மனத்தில் பதித்துக்கொண்டு அருட்பிரகாச வள்ளலாா் தாம் பாடிய ‘தெய்வ மணிமாலை’யில் கீழ்க்காணுமாறு அற்புதமாகச் சொற்பதம் தொடுக்கின்றாா்.
‘ஈயென்று நான் ஒருவரிடம் நின்று கேளாத
இயல்பும், என்னிடம் ஒருவா்
ஈது இடு என்றபோது அவா்க்கு
இலை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும்’
செந்தமிழ்க் கவிநயங்கள் படிக்கப் படிக்க பரவசம்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யுடன் குஜராத் வந்தடைந்த ஜக் லாட்கி கப்பல்!

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு! இலவசங்கள் இல்லை!

எதிர்நீச்சல் போன்று ஒளிபரப்பாகும் மல்லி தொடர்!

உலக சாம்பியன் செல்ஸியை 2-8 என வீழ்த்திய பிஎஸ்ஜி..! பாதியிலேயே வெளியேறிய ரசிகர்கள்!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

