ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

 உள்ளத்தில் மாண்பற்றார்

வெள்ளம்போல அளவிடற்கரிய மாண்புகள் உடைய உறவினர்கள் கூடியிருப்ப, அவ்விடத்தில் மனத்தின்கண் மாண்பில்லாத ஒருவர் இருந்தால்

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:29 am

DIN

பழமொழி நானூறு
 வெள்ளமாண் பெல்லாம் உடைய தமரிருப்ப
 உள்ளமாண் பில்லா ஒருவரைத் தெள்ளி
 மறைக்கண் பிரித்தவரை மாற்றா தொழிதல்
 பறைக்கண் கடிப்பிடு மாறு (பாடல்-180)
 வெள்ளம்போல அளவிடற்கரிய மாண்புகள் உடைய உறவினர்கள் கூடியிருப்ப, அவ்விடத்தில் மனத்தின்கண் மாண்பில்லாத ஒருவர் இருந்தால், அவரை அறிந்து ஆராய்ந்து அவ்விடத்தை விட்டுப் பிரித்து விலக்கிவிட்டே, ரகசியத்தைப் பேச வேண்டும். அப்படி விலக்காதிருந்தால், அங்குப் பேசப்பட்டதெல்லாம் பறையினிடத்தே குறுந்தடியிட்டு அடித்து ஊர் முழுவதும் கேட்கச் செய்ததுபோல, செய்தி எங்கும் பரவியதாக ஆகிவிடும். "பறைக்கண் கடிப்பிடு மாறு' என்பது பழமொழி.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.