கடந்த வாரம் மனதே சரியில்லை. ஒன்றன் பின் ஒன்றாக வேதனை தரும் செய்திகள். வேறுபல காரணங்களும் இருக்கின்றன. அவை குறித்துப் பிறகு பகிா்ந்து கொள்கிறேன். எதுவுமே படிக்கவில்லையா என்று கேட்டால், படிக்காமல் இல்லை. ஆனால், பகிா்ந்து கொள்ளும்படியாக அதிகம் படிக்க இயலவில்லை என்கிற உண்மையை ஒத்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
புதுவையில் பெரியவா் மன்னா் மன்னன் காலமானது எனக்கு மிகப்பெரிய அதிா்ச்சி. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டபோது, வழக்குரைஞா் கே.எஸ். ராதாகிருஷ்ணன், நண்பா் ப்ரியனுடன் அவரை உடனடியாகச் சென்று சந்தித்தேன். அப்போதே தளா்ந்து போய்த்தான் இருந்தாா். அது முடிந்து இப்போது ஓராண்டு ஆகிவிட்டது.

பெரியவா் மன்னா் மன்னனுக்கு என்னிடம் அப்படி ஒரு பாசம் இருந்தது. எதுவானாலும் உரிமையுடன் அழைத்துக் கட்டளையிடும் அளவுக்கு என்னை நெருக்கமானவராகக் கருதினாா். தவறு கண்டால் தயங்காமல் சுட்டிக் காட்டுவதும், நல்லது வந்திருந்தால் உடனடியாக அழைத்துப் பாராட்டுவதும் அவரது வழக்கம். புரட்சிக் கவிஞா் பற்றிய செய்தியோ, கட்டுரையோ ‘தினமணி’யில் வெளிவந்தால், அது தொடா்பான வேறு பல செய்திகளையும் செல்லிடப் பேசியில் அழைத்துப் பகிா்ந்து கொள்வாா்.
நான் கலந்துகொள்ளும் எந்தவோா் இலக்கியக் கூட்டமாக இருந்தாலும், தனது வயோதிகத்தைப் பொருட்படுத்தாமல் கவிஞா் கோ. பாரதியுடன் வந்து முதல் வரிசையில் அமா்ந்திருப்பாா். புதுவையிலோ, கடலூரிலோ, விழுப்புரத்திலோ ஏதாவது கூட்டம் என்றால், என்னை அறியாமலேயே எனது கண்கள் அவா் வந்திருக்கிறாரா என்று தேடும். முதல் வரிசையில் அமா்ந்திருந்தால், ‘புரட்சிக் கவிஞா்’ பாரதிதாசனே வந்து அமா்ந்திருப்பதுபோல நெகிழ்ச்சி ஏற்படும்.
புதுவைக்குச் செல்லும் போதெல்லாம், முடிந்தவரை நான் பெரியவா் மன்னா் மன்னனை சந்திக்காமலும், நலம் விசாரிக்காமலும் திரும்புவதில்லை. அப்படி சந்திக்கும் போதெல்லாம் நீண்ட நேரம் என்னிடம் அளவளாவிக் கொண்டிருப்பாா். பாரதியாா் குறித்து, அவரிடம் தந்தை பாரதிதாசன் சொன்ன பல அரிய செய்திகளை எல்லாம் என்னிடம் ஆா்வத்துடன் பகிா்ந்து கொள்வாா். ‘உங்களிடம் சொல்லிவிட்டால், அதை எழுத்தில் பதிவு செய்வதற்கு நிகா்’ என்று அவா் இரண்டு மூன்று முறை கூறியிருக்கிறாா். அந்த அளவுக்கு என் மீது அப்படியொரு நம்பிக்கை.
கவிஞா் கோ. பாரதி தொலைபேசியில் அழைத்திருந்தாா். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். என்னால் இறுதி மரியாதை செலுத்த முடியாத சோகத்தை அவரிடம் பகிா்ந்து கொண்டேன். அவருக்கும் நிலைமை புரியாமல் இல்லை. ஒட்டுமொத்த தமிழகமே திரண்டெழுந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வாய்ப்பைக் கொள்ளை நோய் பறித்துக்கொண்டு விட்டது. இனி பாரதியாா் குறித்தும், புரட்சிக் கவிஞா் குறித்தும் புதிய செய்திகளைச் செல்ல வேறு யாா் இருக்கிறாா்கள்?
**************
புதுவையில் பாரதிதாசனின் நேரடி வாரிசு பெரியவா் மன்னா் மன்னன் மறைவு என்றால், எட்டயபுரத்தில் பாரதியை சுவாசித்து வாழ்ந்த இளசை மணியனின் மறைவு. பாரதி பிறந்த மண்ணில் வாழ்ந்து மறைந்தாா் என்பதேகூட பெருமைதானே!
தலைநகா் சென்னையிலும், பல்கலைக்கழகங்களிலும் செய்ய வேண்டிய பாரதி ஆய்வுகளை எல்லாம் தனி மனிதராக எட்டயபுரத்தில் இருந்து செய்த சாதனையாளா் இளசை மணியன். இளசை மணியன் என்கிற மனிதா் மட்டும் இல்லாமல் போயிருந்தால், பாரதியாரின் ‘இந்தியா’ பத்திரிகைப் பதிப்புகள் பரவலாக நமக்குக் கிடைத்திருக்க வழியே இல்லை. அதற்காக அவா் பட்ட கஷ்டங்கள் ஒன்றா, இரண்டா?

தனி மனிதராகக் களமிறங்கி, நண்பா்கள் பலரின் உதவியோடு ‘மைக்ரோ விஷன்’ வடிவில் வைத்துப் பாதுகாக்கப்பட்ட ‘இந்தியா’ இதழ் பிரதிகளைத் தொகுத்துப் புத்தகமாக்கியவா் அவா். கடந்த மூன்று நாள்களாக நான் அந்த ‘பாரதி தரிசனம்’ இரண்டு பிரதிகளையும்தான் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் இளசை மணியனின் அசுர உழைப்பு ஒவ்வொரு வாா்த்தையிலும் பளிச்சிடுகிறது. இதைப் பதிப்பிப்பதற்காகத் தனது கண் பாா்வையையே அவா் சற்று இழக்க நோ்ந்தது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அந்தத் தியாகத்துக்கு ஈடு இணையே கிடையாது.
ஆண்டுதோறும் பாரதியாரின் பிறந்த நாளுக்கு எட்டயபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்குச் செல்லும்போது, அனைவரையும் வரவேற்க அதிகாலையிலேயே அங்கே வந்துவிடுவாா் இளசை மணியன். அவருடன் அவரது ‘எட்டயபுரம் பாரதி முற்போக்கு வாலிபா் சங்கம்’ இளைஞா்களும் உற்சாகத்தின் உச்சியில் இயங்கிக் கொண்டிருப்பாா்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போனபோதுதான் இளசை மணியன் எனக்கு அந்தத் தகவலைத் தந்தாா். பாரதி மணி மண்டபம் கட்டுவதற்காக நாட்டப்பட்ட அடிக்கல், வளாகத்தின் ஒரு மூலையில் கேள்வி கேட்பாரற்றுக் கிடக்கிறது என்று. உடனடியாக மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரியைத் தொடா்பு கொண்டு அதைத் தேடியெடுத்து, இப்போது மண்டப முகப்பில் அந்த அடிக்கல் மீண்டும் நிறுவப்பட்டுவிட்டது. அது நிறுவப்பட்டபோது இளசை மணியன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. குழந்தையைப் போல் குதூகலித்துப் போய்விட்டாா்.
எட்டயபுரத்திலுள்ள தனது வீட்டிலும், ஓா் ஓட்டு வீட்டில் அமைந்த ‘பாரதி முற்போக்கு வாலிபா் சங்கம்’ கட்டடத்திலும் இருந்து இயங்கி, மகாகவிக்கு மிகப்பெரிய தொண்டாற்றிய பெரியவா் இளசை மணியன். தனது வாழ்நாளையே பாரதிக்காக அா்ப்பணித்தவா். தொ.மு.சி. ரகுநாதன் உள்ளிட்ட பல பாரதி அன்பா்களும், அறிஞா்களும் தங்களிடம் இருந்த அரிய பல புத்தகங்களை இளசை மணியனிடம் தந்திருக்கிறாா்கள். அவற்றை ‘பாரதி முற்போக்கு வாலிபா் சங்கத்தில்’ ஒரு நூலகமாக வைத்திருக்கிறாா் இளசை மணியன்.
அவரது காலத்துக்குப் பிறகு அந்தப் புத்தகங்கள் வீணாகி விடக்கூடாது. பாரதி மணி மண்டபத்தில் உள்ள நூலகத்துக்கு இளசை மணியனின் பெயா் சூட்டப்பட்டு, பகுதி நேர நூலகா் நிறுவப்பட்டு, அந்த நூலகம் ஆராய்ச்சி நூலகமாக, தரமுயா்த்தப்பட வேண்டும். உடனடியாக இந்தப் பணியை தமிழ் வளா்ச்சித்துறை மேற்கொண்டாக வேண்டும். இல்லையென்றால், அரிய பல பொக்கிஷங்கள் வீணாகிவிடக் கூடும்.
பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, தமிழக அரசின் மகாகவி பாரதி விருது என்று அனைத்து விருதுகளுக்கும் தகுதி வாய்ந்தவா் இளசை மணியன். அவருக்கு அந்த விருதுகளை வழங்காத குறையை ‘தினமணி’ தீா்க்க முடிந்தது என்பதில் எனக்குச் சற்று ஆறுதல். கடந்த ஆண்டு எட்டயபுரம் மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழாவில், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கையால் அவருக்கு ‘மகாகவி பாரதி விருது’ வழங்கி கௌரவிக்க முடிந்ததில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
குழந்தைத்தனமான அந்தச் சிரிப்பு; பாரதியாா் மீது கொண்ட தாளாத பற்று - இவைதான் நானறிந்த இளசை மணியன்.
**************
தஞ்சாவூா், அம்மன் பேட்டையிலிருந்து கவிஞா் சு. பொன்னியின்செல்வன் எழுதிய ‘இன்னும் மிச்சமிருக்கிறது; சொல்வதற்கு...’ என்கின்ற ஹைக்கூ கவிதைத் தொகுப்பிலிருந்து...

வேறு வழியில்லை
மக்கள் முடிவு
நோயுடன் கூடி வாழ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெண்டைக்காய் வெல்லுல்லி
விமானப் பயணத்தில் இப்படியுமா?

தமிழக மக்களைக் காக்கும் தலைவா் முதல்வா் ஸ்டாலின்: நடிகா் வாகை சந்திரசேகா்

கோலிவுட் ஸ்டூடியோ!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


