பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
ஒல்லென்று ஒலிக்கின்ற கடல் நீரானது பார்மேல் ஏறிப் பாய்வதுபோலத் தோன்றும் துறைகளுக்கு உரியவனே, கேளாய்! தீமையானவை எல்லாம் ஆகிவருவதுபோல முதலிலே தோன்றினாலும் உறுதியாகக் கெட்டே போகும்.


அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ? ஒல்லொலிநீர்
பாய்வதே போலும் துறைவ! கேள்; தீயன
ஆவதே போன்று கெடும் (பாடல்}173)
ஒல்லென்று ஒலிக்கின்ற கடல் நீரானது பார்மேல் ஏறிப் பாய்வதுபோலத் தோன்றும் துறைகளுக்கு உரியவனே, கேளாய்! தீமையானவை எல்லாம் ஆகிவருவதுபோல முதலிலே தோன்றினாலும் உறுதியாகக் கெட்டே போகும். ஆதலால், பாவத்தைச் செய்பவர்களுடைய அரிய பொருளால் கிடைக்கும் ஆக்கத்தை, நல்லவற்றைச் செய்து வாழ்பவர் என்றாவது விரும்புவாரோ? விரும்பார். "தீயன ஆவதே போன்று கெடும்' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...