மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மாறுபாடில்லாத செயல்களின் மூலமாகவே ஒருவன் பெரும் பொருள் பெற்றனன். அந்தப் பொருள் வந்து சேர்ந்த வகையும் அதற்கான முதலீடும் அப்படியே அறநெறிக்கு மாறுபாடில்லாதது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:30 pm

தினமணி

தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால், அப்பொருள்
தொக்க வகையும் முதலும் அதுவானால்,
"மிக்க வகையால் அறஞ்செய்க!' என வெகுடல்
அக்காரம் பால்செருக்கும் ஆறு. (பாடல்-199)


மாறுபாடில்லாத செயல்களின் மூலமாகவே ஒருவன் பெரும் பொருள் பெற்றனன். அந்தப் பொருள் வந்து சேர்ந்த வகையும் அதற்கான முதலீடும் அப்படியே அறநெறிக்கு மாறுபாடில்லாதது. அங்ஙன மானால், "பலதிறப்பட்ட வகைகளால் எல்லாம் அறம் செய்வாயாக' என அவனிடம் சான்றோர் சினந்து கூறவேண்டாம். அப்படி அவர் கூறினாலும், அது சர்க்கரையில் பாலின் சுவை மயக்கமடையும் நிலைமையைப் போன்றதாகும். "அக்காரம் பால்செருக்கும் ஆறு' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.