தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

வெள்ளமானது அலையெழுந்து கரையிலே மோதி ஆரவாரிக்கும் கடல்நீர்ப் பெருக்கை உடைய சேர்ப்பனே, தான் படித்து அறிந்தது என ஒரு தகுதி இல்லாது போனாலும், தான் எடுத்த செயலை இறுதிவரையும் முடித்து விடுகின்றவன் 

News image
Updated On :24 ஜனவரி 2021, 4:07 pm

தினமணி

கற்றதொன்று இன்றி விடினும் கருமத்தை
அற்றம் முடிப்பான் அறிவுடையான் - உற்றியம்பும்
நீத்தநீர்ச் சேர்ப்ப இளையானே யாயினும்
மூத்தானே யாடு மகன் (பாடல்-186)

வெள்ளமானது அலையெழுந்து கரையிலே மோதி ஆரவாரிக்கும் கடல்நீர்ப் பெருக்கை உடைய சேர்ப்பனே, தான் படித்து அறிந்தது என ஒரு தகுதி இல்லாது போனாலும், தான் எடுத்த செயலை இறுதிவரையும் முடித்து விடுகின்றவன் அறிவுடையவனே ஆவான். அவ்வாறு செயலைச் செய்து முடிப்பவன், செயலில் இளையவனே ஆனாலும், அவனை அறிவினால் முதிர்ந்தவன் என்றே கொள்ள வேண்டும். தளராத முயற்சி உடைமையே அறிவுடைமையாகும். "இளையானே யாயினும் மூத்தானே யாடு மகன்' என்பது பழமொழி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.