மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மடமாகிய பண்பைக் கொண்டவளும் சாயலிலே மயிலைப் போன்றவளுமான பெண்ணே! அறிவாற் சிறந்த சான்றோர், கடன் வாங்கியாவது  தான் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாது செய்வர்.

News image
Updated On :25 ஜூலை 2021, 11:40 am

தினமணி

அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்
இடங்கண் டறிவாமென் றெண்ணி யிராஅர்
மடங்கொண்ட சாயல் மயிலன்னாய்! சான்றோர்
கடங்கொண்டும் செய்வார் கடன். (பாடல்-212)

மடமாகிய பண்பைக் கொண்டவளும் சாயலிலே மயிலைப் போன்றவளுமான பெண்ணே! அறிவாற் சிறந்த சான்றோர், கடன் வாங்கியாவது  தான் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாது செய்வர். அப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து வறுமை உடையவர்களாக இருத்தலால் ஒன்றைச் செய்ய இயலாத காலத்தும் "செய்யும் காலம் வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்' என்று கருதி இருக்க மாட்டார்கள்; அதை எப்படியும் செய்யவே முற்படுவார்கள். "கடங்கொண்டும் செய்வார் கடன்' என்பது பழமொழி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.