பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
அளவுகடந்த தீய செயல்களையே வெகுண்டு பல நாள்கள் செய்துவந்த போதும், கீழ்மக்களிடத்திலே அவற்றைப் பற்றிய ஒருவிதமான பழியும் தோன்றுவதில்லை.


கன்றி முதிர்ந்த கழியப்பன் னாள் செயினும்
ஒன்றும் சிறியார்கண் என்றானும்} தோன்றாதாம்
ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்
குன்றின்மேல் இட்ட விளக்கு. (பாடல்}204)
அளவுகடந்த தீய செயல்களையே வெகுண்டு பல நாள்கள் செய்துவந்த போதும், கீழ்மக்களிடத்திலே அவற்றைப் பற்றிய ஒருவிதமான பழியும் தோன்றுவதில்லை. "அது அவர் இயல்பு' எனச் சான்றோர் ஒதுக்கிவிடுவர். ஆனால், உயர்ந்த நிலையிலே உள்ளவர்களிடத்தே தோன்றிய குற்றமானது ஒன்றாகவே இருந்தாலும்கூட, அது குன்றின் மேலே இட்டுவைத்த விளக்கைப்போல நெடுந்தொலைவுக்கும் தெரிந்து பழிக்கப்படுவதாக ஆகிவிடும். "குன்றின்மேல் இட்ட விளக்கு' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...