டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

இனிதாக இசைத்தல் பொருந்திய யாழின் இனிய ஒலியைப்போல, வண்டினம் ஆரவாரிக்கும் நீர்வளமுடைய ஊரனே!

News image
Updated On :26 செப்டம்பர் 2021, 11:47 am


முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும்
பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ? - இன்னிசை
யாழின்வண் டார்க்கும் புனலூர! ஈனுமோ
வாழை இருகால் குலை?  (பாடல்-(221)


இனிதாக இசைத்தல் பொருந்திய யாழின் இனிய ஒலியைப்போல, வண்டினம் ஆரவாரிக்கும் நீர்வளமுடைய ஊரனே! வாழை மரங்கள் இருமுறை எப்போதாவது குலை ஈனுமோ? ஈனாது. அதுபோலவே முன்பு ஒருமுறை பிழை செய்தவனையே, அவனே பின்னரும் மிகுதியாகப் பிழை செய்த காலத்தில் எவராவது பொறுப்பார்களோ? "ஈனுமோ வாழை இருகால் குலை?' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.