பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
உலகத்திலே, மூக்கற்றதான ஒன்றுக்கு வேறு எவ்விதப் பழியுமே கிடையாது. அதுவே பழியாக அமையும். அதுபோலவே, பிறரால் தாம் தாக்கப்படுகின்ற பொழுதிலே, அவருடைய சொந்தக்காரரைப் போல அவரை நன்றாகப் புகழ்ந்து


தாக்குற்ற போழ்தில் தமரேபோல் நன்குரைத்துப்
போக்குற்ற போழ்தில் புறனழீஇ மேன்மைக்கண்
நோக்கற்ற வரைப் பழித்தலென்? என்னானும்
மூக்கற்ற தற்கில் பழி. (பாடல்-250)
உலகத்திலே, மூக்கற்றதான ஒன்றுக்கு வேறு எவ்விதப் பழியுமே கிடையாது. அதுவே பழியாக அமையும். அதுபோலவே, பிறரால் தாம் தாக்கப்படுகின்ற பொழுதிலே, அவருடைய சொந்தக்காரரைப் போல அவரை நன்றாகப் புகழ்ந்து பேசிவிட்டு, அவர் அங்கிருந்து அகன்றவுடனே அவரைப் பற்றிப் புறங்கூறிப் பழித்துத் திரிபவர் சிலர். மேன்மை குணத்தின்கண் கருத்தற்ற அத்தகையவர்களைப் பழித்தலால் என்ன பயன்? அவர்கள் இயல்பே அதுதானே! "மூக்கற்றதற்கு இல்லை பழி' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...