கண்டறிவார் போலார் கெழீஇயின்மை செய்வாரைப்
பண்டறிவார் போலாது தாமும் அவரேபோல்
விண்டொரீஇ மாற்றி விடுதல், அதுவன்றோ
விண்டற்கு விண்டல மருந்து. (பாடல்-251)
நம்மை நன்கு அறிந்தவராக இருந்தும், அறியாதவரைப் போல நட்புக்குப் பொருந்தாத செயல்களைச் செய்வார்கள் சிலர். அவரை, நாமும் முன்னே அறிந்தவரைப் போலாது, அவரைப் போலவே உள்ளத்தாற் பிரிந்து அவரை ஒதுக்கிவிட வேண்டும். அப்படிச் செய்வதே, ஒருவன் கைவிட்ட காலத்து, அவனைப் போற்றாது தானும் கைவிடுதலே அவன் செயலுக்கு நல்ல மருந்து என்று சொல்லப்படுவதாகும். "விண்டற்கு விண்டல மருந்து' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,000 கனஅடியாக சரிவு

மெரினா கடற்கரையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: குதிரை ஓட்டி கைது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

சொதப்பிய டாப் ஆர்டர், பந்துவீச்சில் அசத்திய ஆர்சிபி; 2-வது சாம்பியன் பட்டம் யாருக்கு?
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



