மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

களவாடிய புள்ளி மயில்...

ஊடலும் கூடலும் காதலர்க்கு இயல்பே. இதை வள்ளுவரும் தனது குறளில், "தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கு நீர் / இந்நீரர் ஆகுதிர் என்று' (1319) என்கிறார்.

News image
Updated On :10 ஜூலை 2022, 5:30 pm IST


ஊடலும் கூடலும் காதலர்க்கு இயல்பே. இதை வள்ளுவரும் தனது குறளில், "தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கு நீர் / இந்நீரர் ஆகுதிர் என்று' (1319) என்கிறார். ஊடிய அவளை நான் பணிந்துரைத்து ஊடல் தீர்க்கும்போதும் "பிற மகளிரிடமும் இத்தன்மை உடையவர் ஆவீர்' என அவள் சினம் கொள்வாள். ஏறத்தாழ இக்கருத்தையொட்டி பரிபாடலிலும் இத்தகைய ஊடல் காட்சி ஒன்று.

மயில் ஒன்று ஒருவனது காதலியை ஒத்த இயல்புடன் தோகை விரித்து களிநடனமாட, அதை மையமாக வைத்து தலைவி ஊடல் கொள்கிற காட்சி.

திருப்பரங்குன்றம் சோலையில் தலைவனும் தலைவியும் கருத்தொருமித்து மெய்ம்மறந்து கண்களை மூடியுள்ளார்கள். தலைவன் மட்டும், எதிரே வந்த ஒரு புள்ளிமயில் நீலமணிகளை ஒத்த நிறத்தை தன் தோகையில் பெற்று, தன் தலைவியின் சாயலைப் பெற்று நடனமாடி நின்றதை மனக்கண்ணால் மீண்டும் ரசித்து குறுநகை புரிகிறான்.

அதை கவனித்த தலைவி அவனிடம் "உண்மையைத் சொல்லுங்கள்; யாரை நினைத்து குறுநகை புரிந்தீர்? அவள் யார்?' என சினம் கொள்கிறாள்.

அதற்கு அவன் "அன்பே! உன் இயல்பைக் களவாடி தானும் நின்னொப்பதாய் ஆடி மகிழும் இம்மயிலின் தன்மையையும் அறியாமையையும் எண்ணி அம்மயிலின் மீது இரக்கமுற்று நோக்கி கண்மூடி குறுநகை புரிந்தேன்; என் மேல் சினம் கொள்ளலாமா?' என்றதும் தலைவி சினம் தணிந்தாள்.

தமிழரின் இரு விழி போன்ற அகம், புறம் என்னும் இரு பொருளின் கூடலே, பரிபாடல். மேலும், இந்த ஊடலை பரிபாடல்  "அழகிய தேருடைய பாண்டியனின் எல்லையில் உள்ள திருப்பரங்குன்றத்தின் இயல்பு இது' என்கிறது.

ஒள்ளொளி மணிப் பொறியால் மஞ்ஞை நோக்கித்தன்
உள்ளத்து நினைப்பானைக் கண்டனள், திருநுதலும்;
உள்ளிய துணர்ந்தேஃது உரையினி, நீஎம்மை
எள்ளுதல் மறைத்த லோம்பு என்பாளைப் பெயர்த்தவன் 
காதலாய்! நின்னியல் களவெண்ணிக் களிமகிழ்
பேதுற்ற இதனைக் கண்டு யான் நோக்க, நீஎம்மை
ஏதிலா நோக்குதி என்றாங்கு உணர்ப்பித்தல்
ஆய்தேரான் குன்ற இயல்பு.  (பரி.செவ்வேள்: பா.18)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.