பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
மன வேறுபாடு எல்லாரிடத்தும் இருக்கும். எனவே, ஒருவர் கூறியதை அவருக்குத் துணையாக உள்ளவரின் சொற்களைக் கொண்டே மறுத்துவிடலாம்.


மாற்றத்தை மாற்றம் உடைத்தலான், மாற்றவர்க்கு
ஆற்றும் வகையான் அவர்க் களைய வேண்டுமே,
வேற்றுமை யார்க்கும் உண்டு ஆதலான் } ஆற்றுவான்
நூற்றுவரைக் கொண்டு விடும். (பாடல்: 369)
மன வேறுபாடு எல்லாரிடத்தும் இருக்கும். எனவே, ஒருவர் கூறியதை அவருக்குத் துணையாக உள்ளவரின் சொற்களைக் கொண்டே மறுத்துவிடலாம். அதுபோல பகைவர்க்குத் துணையாக இருக்கும் பகைவரைக் கொண்டே பகை மூட்டிப் பகையை வெல்லுதல் வேண்டும். அவ்வாறு செய்ய வல்ல ஒவ்வொருவனும் நூறு பேரைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தவன் ஆவான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...