
சீர்த் தகு மன்னர் சிறந்த அனைத்தும் கெட்டாலும்
நேர்த்து உரைத்து எள்ளார், நிலை நோக்கி, - சீர்த்த
கிளை இன்றிப் போஒய்த் தனித்து ஆயக் கண்ணும்
இளைது என்று பாம்பு இகழ்வார் இல். (பாடல்: 383)
பாம்பானது தன் இனத்தை விட்டு விலகித் தனியாக இருப்பினும், இளைத்த பாம்பு என்று யாரும் இகழ்ந்து தீண்டார். அதுபோல ஒரு காலத்தில் சிறப்புடை மன்னராக விளங்கிப் பிற்காலத்து அவற்றை இழந்து இருந்தாலும் அவரைப் பற்றி இகழ் உரையை வெளியே சொல்லுதல் ஆகாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.