
உடாஅதும், உண்ணாதும், தம் உடம்பு செற்றும்,
கெடாஅத நல்லறமும் செய்யார், கொடாஅது
வைத்தீட்டி னாரிழப்பர்; வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி.
(பாடல் 10, அதிகாரம்: செல்வம் நிலையாமை)
வானளாவிய மலைமுடிகளையுடைய நாட்டிற்கு உரிய தலைவனே தாம் நன்றாக உடுத்து அனுபவிக்காமலும், வயிறார உண்டு பயனடையாமலும், உடலை வருத்திக் கொண்டும், என்றும் அழிவில்லாத தருமங்களைச் செய்யாதவர்களாகவும், யாசகர்களுக்குக் கொடாதவர்களாகவும், பொருளைச் சேர்த்து வைப்பவர்கள் இருக்கிறார்களே - அவர்கள் அதனை ஒருநாள் இழந்துவிடுவர். இதற்குப்பற்பல மலர்களினின்றும் தேனைக் கொண்டு வந்து கூட்டிலே சேர்த்துவைக்கும் தேனீயே நல்ல சான்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.