

'மாக்கேழ் மடநல்லாய்' என்றரற்றுஞ் சான்றவர்
நோக்கார்கொல், நொய்யதோர் புக்கில்லை?} யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோலறினும், வேண்டுமே,
காக்கை கடிவதோர் கோல்!
(பாடல் 41அதிகாரம்: தூய்து அன்மை)
'மாந்தளிர் போன்ற மேனி நிறத்தினையும், இளமைப் பருவத்தினையும் உடைய பெண்ணே!' என்று வாய்விட்டுப் போற்றுகின்ற பெரிய மனிதர்கள், அற்பமான ஒரு புகத்தக்க வீடு அது என்பதைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டார்களோ? அப்படி அவர்களால் புகழப்பட்ட அழகிய உடலிலே, ஈயின் சிறகின் அளவான ஒரு தோற்பகுதியானது அறுபட்டு போனாலும், அந்தப் புண்ணைக் குத்துதற்கு வருகின்ற காக்கையை ஓட்டுவதற்கு, ஒரு கொம்பே துணையாக வேண்டியதிருக்குமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.