தொகுதி மறுவரையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை: திமுக தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் - இந்திய கம்யூ.தொகுதி மறுவரையறை மசோதா: மு. க. ஸ்டாலினை சந்திக்கும் சோனியா, கார்கே?தொகுதி மறுவரையறை: மு.க. ஸ்டாலினை சந்திக்கும் மமதா பானர்ஜி!திருப்பரங்குன்றம்: உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி!நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரை

அருந்ததி மின்னும் இரவில்...

ஐங்குறுநூற்றிலுள்ள முல்லைத் திணைப் பாடல்களால் சிறப்புப் பெற்றவர் பேயனார். சங்க இலக்கியத்தில் பேயனார் பாடியதாக 106 பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன.

கோப்புப் படம்

Updated On :

முனைவர் அ. மரிய செபஸ்தியான்

ஐங்குறுநூற்றிலுள்ள முல்லைத் திணைப் பாடல்களால் சிறப்புப் பெற்றவர் பேயனார். சங்க இலக்கியத்தில் பேயனார் பாடியதாக 106 பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன.

இரவில் தலைவன் தலைவியைப் பிரிந்து போர் பாசறையில் தங்கியிருகின்றான். தலைவனை எதிர் நோக்கி தலைவி வீட்டில் காத்திருக்கிறாள். தலைவன் தலைவியை எண்ணிப் பாடியதாக அமைந்த பாடல்களில்...

பெருஞ்சின வேந்தன் அருந்தொழில்

தணியின்

விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ

இருண்டு தோன்று விசும்பின் உயர்நிலை

உலகத்து

அருந்ததி அனைய கற்பிற்

குரும்பை மணிப் பூண் புதல்வன் தாயே

-(ஐங்.442)

என்ற பாடலானது பெருஞ்சினம் கொண்ட அரசனின் அரிய போர்த் தொழில் முடிவுக்கு வந்தால், இருண்ட வானத்தின் உயரத்தில் தோன்றும் அருந்ததி விண்மீன் போலக் கற்பில் சிறந்தவளும், குரும்பை போன்ற மணிகள் கோத்த அணியை அணிந்த நம் மகனின் தாயுமான அவள், விருந்தினரை நிறையப் பெறும் உரிமை பெறுவாள் என்கிறது.

இந்தப் பாடலின் அமைப்பைக் கவனித்தால் பேயனாரின் கவித்திறன் நமக்குப் புலப்படும். முதலாவதாகப் போர் எப்போது முடியும் என்பது தலைவனுக்குத் தெரியாது. அதனால் பேயனார் 'தணியின்' என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பாடலைத் தொடங்குகிறார்.

போர்க்களத்தில் அரசனின் பெருங்கோபத்துக்கு முன் தலைவனின் ஆசை மிகச்சிறியது. அவன் வெற்றியையோ பரிசையோ கேட்கவில்லை. தன் வீட்டில் விருந்தினர் வந்து போகும் அன்றாட வாழ்க்கை திரும்ப வேண்டும் என்றுதான் ஏங்குகிறான்.

இரண்டாவதாகப் பாடலில் இடம்பெறும் அருந்ததி உவமை. பகலில் நடக்கும் திருமணச் சடங்கில் மணமக்களுக்கு அருந்ததி விண்மீனைக் காட்டும் வழக்கம் இன்றும் உண்டு. ஆனால், இந்தப் பாடலில் அருந்ததி இருண்டு வானில் தோன்றுகிறது. பாசறையில் இரவில் விழித்திருக்கும் தலைவன், இருளில் மின்னும் அருந்ததி விண்மீனைத் தனியே கண்டு காதல் மனைவியை நினைப்பதாகக் கற்பனை செய்யலாம். இது நேரடியாகப் பாடலில் சொல்லப்படவில்லை. வாசிக்கும்போது உணர முடியும்.

பாடலின் கடைசி வரியில் தலைவியை மனைவி என்றோ, காதலி என்றோ அழைக்காமல், புதல்வன் தாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைவன் போருக்குப் புறப்படும் போது மகன் கைக்குழந்தையாக இருந்திருக்கலாம். திரும்பும்போது நடக்கக் கற்றிருப்பான். ஒரு தந்தையின் தவிப்பை இவ்வரி சுமந்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.