மின்னும் ஓர் இரவு படத்தின் டிரைலர் வெளியீடு!

மின்னும் ஓர் இரவு படத்தின் டிரைலர் வெளியானது பற்றி...

minnum oru iravu

மின்னும் ஓர் இரவு படத்தின் டிரைலர் வெளியீடு

Updated On :

நடிகர் இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'மின்னும் ஓர் இரவு' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மின்னும் ஓர் இரவு' படத்தில் முதன்மை வேடத்தில் இனிகோ பிரபாகர் நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தின் நாயகியாக அஞ்சு கிருஷ்ணா அஷோக் நடிக்க சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரணவ் சூரஜ் இசையமைத்துள்ளார்.

கிரைம் திரில்லராக உருவாகியுள்ள 'மின்னும் ஓர் இரவு' படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வருகின்ற நவ. 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Trailer release for the film 'Minnum Oor Iravu'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.