பழிக்கு ஆளாகக் கூடாது
உயர்ந்த அருவிகளையுடைய நாட்டிற்கு உரியவனே! இன்பத்தைத் தந்து, அவ்விடத்தே தாழ்மை நேர்ந்தாலும், அதனால் அப்படி இன்பஞ் செய்தலை மீண்டும் விட்டுவிடாது, அதன் பக்கமாகவே...

இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க!-இன்பம்
ஒழியாமை கண்டாலும், ஓங்கருவி நாட!
பழியாகா வாறே தலை.
(பாடல் 79 அதிகாரம்: பொறை உடைமை)
உயர்ந்த அருவிகளையுடைய நாட்டிற்கு உரியவனே! இன்பத்தைத் தந்து, அவ்விடத்தே தாழ்மை நேர்ந்தாலும், அதனால் அப்படி இன்பஞ் செய்தலை மீண்டும் விட்டுவிடாது, அதன் பக்கமாகவே இருக்கின்ற உனக்கு, இன்பம் நீங்காமல் இருப்பதைப் பார்த்தாலும், பழிப்பு உண்டாகாத அறவழியே தலைமையானதாகும். இன்பம் வருமிடத்துத் தாழ்வும் வருமானால் துன்பத்தையேனும் பொறுத்துக்கொள்ள வேண்டுமேயன்றித் தாம் இன்பத்தை விரும்பித் தாழ்வுக்கு உட்பட்டுப் பழிக்கு ஆளாகக் கூடாது'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






