நரக வேதனை தரும் தீவினை
பிறருடைய மனைவியரை விரும்பி, எழுகின்ற காலத்திலே தம்முள் தோன்றுகின்ற அச்சமோ மிகவும் பெரிதாகும்.

அச்சம் பெரிதால்; அதற்கின்பம் சிற்றளவால்;
நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால்;} நிச்சலும்
கும்பிக்கே கூர்த்த வினையால்; பிறன்தாரம்
நம்பற்க, நாணுடையார்!
(பாடல் 81 அதிகாரம்: பிறர்மனை நயவாமை)
பிறருடைய மனைவியரை விரும்பி, எழுகின்ற காலத்திலே தம்முள் தோன்றுகின்ற அச்சமோ மிகவும் பெரிதாகும். அந்தப் பேரச்சத்திற்குக் கைம்மாறாகக் கிடைக்கும் இன்பமோ மிகவும் சிறிதளவினதே. அந்த ஒழுக்கத்தின் உண்மையான நிலையினை ஆராய்ந்து பார்க்குமிடத்து, அரசனாற் கொலை செய்யப்படுதலும் நேர்வதாகும். எந்நாளும் நரக வேதனையை அடைதற்குரிய மிகுந்த தீவினையும் அதுவாகும். அதனால், நாணம் உடையவர் எவருமே அயலானது மனைவியை விரும்பாதிருக்கக் கடவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

