அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன்!

அயோத்தியில் அவதாரம் செய்திருந்தாலும் நாடு முழுவதிலும் ராமபிரானுக்கு பல கோயில்கள் உண்டு. குறிப்பாகத் தமிழகத்தில் பல பிரசித்தி பெற்ற ராமர் தலங்கள் உண்டு. ஏனெனில் ராமன், அயோத்திக்கு மட்டுமல்ல... அகிலாண்ட
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன்!

அயோத்தியில் அவதாரம் செய்திருந்தாலும் நாடு முழுவதிலும் ராமபிரானுக்கு பல கோயில்கள் உண்டு. குறிப்பாகத் தமிழகத்தில் பல பிரசித்தி பெற்ற ராமர் தலங்கள் உண்டு. ஏனெனில் ராமன், அயோத்திக்கு மட்டுமல்ல... அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் அல்லவா?  தஞ்சை ஜில்லாவில் உள்ளது வடுவூர். இங்குள்ள கோதண்டராமர் மிகப் பிரசித்தம். இங்கு ராமன் எழுந்தருளியிருப்பதற்கு வரலாறு ஒன்றுண்டு. இந்தத் தலத்தில் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தவர் ருக்மிணி, சத்யபாமையுடன் கூடிய ராஜகோபாலனே. அருகிலுள்ள தலைஞாயிறில் சிறு கோயிலில் ராமர், லஷ்மணர், சீதை வடிவங்கள் இருந்திருக்கின்றன. தஞ்சையிலிருந்த நாயக்க மன்னர் ஒருவர் காலத்தில், "தலை ஞாயிறு' என்னுமிடத்திலிருந்து இந்த ராமர், வடுவூருக்கு வந்ததாகச் சொல்கின்றனர்.

ராஜ கோபாலன் அவதாரத்துக்கு முந்தினதாயிற்றே ராமாவதாரம்? ஆகையால் கோபாலன், ராமருக்குக் கருவறையிலேயே இடம் கொடுத்துவிட்டு ஓரமாக ஒதுங்கிக் கொண்டிருக்கிறார். ராஜ கோபாலன் கோயிலாக இருந்தாலும் இக்கோயிலில் ராமநவமி உற்சவம்தான் பெரிய உற்சவம்.

காவிரிக் கரையிலுள்ள ராமனை அர்ச்சகர்கள் ""காவிரி தீர ரஸிகாயா''  என்று அர்ச்சித்து மகிழ்கிறார்கள். கங்கைக் கரையில் பிறந்த ராமன், காவிரிக் கரையில் வந்து நிலைத்திருக்கிறானே! அருகிலேயே தில்லை விளாகம் ராமன், அடம்பர் ராமன், முடிகொண்டான் ராமன் முதலியவர்களையும் தரிசித்து மகிழலாம்.

ஸ்ரீ யோக ராமர் திருக்கோயில், வேலூர் திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப் பெரிய வைணவக் கோயிலாகும். மிக அபூர்வமான கோலத்திலும், நிலையிலும் யோக ராமராக-  உட்கார்ந்த நிலையில் தியானம் செய்யும் கோதண்டம் இல்லா ராமராகக் காட்சி அளிக்கிறார் இவர். இலங்கையில் விபீஷண பட்டாபிஷேகம் முடிந்து, ராமர் அயோத்திக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், ஸ்ரீஸýகப் பிரம்ம ரிஷி ராமருக்கு தவக்கோலத்தில் தனது பிரார்த்தனையைச் செய்கிறார். ஸ்ரீராமர் தன் தேரிலிருந்து இறங்கி அவர் முன் தோன்றினதாகவும், ஸýகர் நெகிழ்ந்து மகிழ்ச்சியுற்றதாகவும் வரலாறு. தம் பெரும் குணத்தால் இறங்கி ரிஷியை வாழ்த்தியதால் இவ்வூர் "நெடுங்குணம்' என்று பெயர் பெற்றது.

பரதனைக் காணும் அவசரத்தில் இருந்த தருணத்தில்கூட, பக்தனின் விருப்பத்தை நிறைவேற்றின செயலே இந்தத் தலத்தின் மகிமை. இந்த யோக ராமருக்கு நாலுகால பூஜை உண்டு.

மதுராந்தகம் ஏரியைக் காத்ததும் ஸ்ரீ ராமன் என்பதால் அங்குள்ள சக்ரவர்த்தி திருமகனை "ஏரி காத்த பெருமாள்' என்று மக்கள் அழைக்கிறார்கள். இது சென்னை-திண்டிவனம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

இஞ்சிமேடு இன்னொரு தலம். மிகப் பழமையான கோயில்! கோயிலில் உள்ள மூலவர் ராமரிடம் இருக்கிற வில்லின் முகத்தில் நரசிம்மர் முகம் உள்ளது. மூலம் மற்றும் ஆயில்யம் நட்சத்திர பரிகாரத் தலம். மூல நட்சத்திரம் அனுமாருக்கு விசேஷம். பத்ராசலத்தில் ராமதாஸர் கட்டிய கோயில் உலகப் புகழ் பெற்றது. திருவஹிந்திபுர ராமனும் அழகில் மிக்கவர். திருப்பதி திருமலையில் உள்ள சற்றே தலை சாய்த்த ராகவரின் கம்பீரம் சொல்லி மாளாது.

யாகத்திலிருந்து தோன்றிய ராமர், பெரமநல்லூர் வந்தவாசி மாவட்டத்திலிருக்கிற யக்ன சம்ரக்ஷண ராமர். தஞ்சை மாவட்டத்திலிருக்கிற திருவெள்ளியங்குடி, கும்பகோணத்திலிருந்து அணைக்கரை போகிற பாதையில் உள்ளது. இங்கு மூலவர்- கோலவில்லி ராமன். திருமங்கையாழ்வார் இதை மங்களா சாசனம் செய்துள்ளார்.

வடநாட்டுத் திருப்பதிகளில் ஒன்று எனப் பெயர் பெற்ற திருஅயோத்தி, மொகல் சராய் (காசி) - லக்னௌ ரயில் தடத்தில் உள்ளது. ஃபைஸôபாத் ஸ்டேஷனிலிருந்து வண்டியில் போக வேண்டும். அங்கிருந்து அயோத்தி, சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. பல ஆழ்வார்களும் அதனை மங்களாசாசனம் செய்துள்ளனர். டெல்லியில் உள்ள "ராம் மந்திரில்' கோயில் கொண்டுள்ள பெருமானும் பிரமிப்பூட்டும் அழகுள்ளவர்.

சரி, ஸ்ரீராமருக்கு ஏன், எப்படி இத்தனை மகத்துவம்? சங்க காலத்திலேயே ராமரைப் பற்றின அதாவது ராமாயணம் பற்றி பாடல்கள் புழங்கி வந்திருக்கின்றன. தர்மத்தையும், நல்லொழுக்கத்தையும் கட்டிக் காத்த ஒரே காரணத்தால்தான் அவருக்கு இந்தச் சிறப்பு வந்ததாகக் காஞ்சி முனிவர் கூறுகிறார்.

 ""ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விட்டுவிடக் கூடாது. ராமனை சாட்சாத் லக்ஷ்மணனே பரிகசித்தான். "அண்ணா! நீ தர்மம் தர்மம் என்று எதையோ கட்டிக் கொண்டு அழுவதால்தான் இத்தனைக் கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு, தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா!' என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமன் யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான், கடைசியில் அது அவனைக் காத்தது'' என்கிறார் மஹா பெரியவர்.

    "ஸ்ரீ ராமா' என்ற எழுத்தைத் திரும்பத் திரும்பக் கூறினாலே, விஷ்ணு சஹஸ்ர நாமம் மொத்தமும் பாராயணம் பண்ணின பலன் கிடைக்குமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.

    ""நன்னடத்தை வேரூன்றி வளர வேண்டும்'' என்று ஸ்ரீ ராம நவமியன்றும், மறுதினம் புனர் பூஜையிலும் ராம நாமம் சொல்லிப் பிரார்த்திப்போமாக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com