இது "அக்னி நட்சத்திர' காலம். உயிரினங்களைக் கடுமையான அனல் வாட்டி வதைக்கும். பலருக்கு "சன் ஸ்ட்ரோக்' போன்றவற்றால் பெரும் ஆபத்து உண்டாகக்கூடும். இதற்கெல்லாம் காரணம், சூரியன் வெளிப்படுத்தும் கடுமையான வெப்பம்தான். ஆனால் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்து, கோடைக்கேற்ற உணவுகள் அருந்தி, தற்காப்போடு நடந்துகொள்பவரை கத்திரி வெயில் அதிகம் பாதிப்பதில்லை. ஆயின், "மனித குலம் என்னதான் சாமர்த்தியமாக நடந்துகொண்டாலும், சங்கரராகிய (நல்லதையே செய்பவர்) சிவபெருமான் திருவருளின்றி எதுவும் முழுமை பெறாது' என்று வேத - புராணங்கள் கூறுகின்றன.
"அருக்கனில் சோதி அமைத்தோன்' என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறுகின்றார். "அருக்கன்' எனில் சூரியன். அதில், "சிவமே செந்தீயாக' நிற்கிறது என்பது பொருள். இதே கருத்து, யஜுர் வேதத்திலும் தெளிவாகக் கூறப்படுகிறது. கத்திரி வெயில் காலத்தில், சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்வது பெரும் புண்ணியம். "இந்த உலகமே சிவ வடிவம்' என்று வேதங்கள் கூறுவதால் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும் பெரும் புண்ணியம், வெப்பு நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றும்.
சில சிவாலயங்களில், "தாரா பாத்திரம்' என்ற குவிந்த அடிப்பாகம் உடைய குடம் போன்ற அமைப்பை, சிவலிங்கத் திருமேனியின் மீது கட்டி, அதிலிருந்து துளித்துளியாக லிங்கத்தின் மீது தண்ணீர் விழும்படி, இச்சந்தர்பத்தில் வைப்பது மரபு. வீட்டில் சிவலிங்க பூஜை செய்பவர்களும் இதைப் பின்பற்றலாம். அரனார் குளிர்ந்தால் அகிலமே குளிரும்! ஏனெனில் அவர் அபிஷேக பிரியன்!
"நடமாடும் கோயில்' என்று சிவனடியார்களைக் குறிப்பிடுகின்றார் திருமூலர். ஆதி பரம்பொருளாகிய பரமேஸ்வரனே, தன் பக்தன் பாண்டியன் போரிட்டபோது, "தண்ணீர் பந்தல்' வைத்து அனைவருக்கும் உதவினார். "தண்ணீர் பந்தர் செயம் பெற வைத்து நன்னீர்ச் சேவகனாகிய நன்மையும்' என்றிதனை போற்றுகிறது திருவாசகம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய அப்பூதியடிகளும் தண்ணீர் பந்தல் வைத்து தாகம் தீர்த்ததை, சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தின் மூலம் அறிகின்றோம். எனவே "கத்திரி வெயில்' காலத்தில் மகேசன் சேவையோடு, மக்கள் சேவையும் செய்தால் சூரியக் கடவுளின் அருளும், சிவத்தின் அருளும் கிடைத்துக் குளிர்வோம் என்பது உறுதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 1 - நேரலை!

இனி பொதுமக்களும் பிக் பாஸில் பங்கேற்கலாம்! பிக் பாஸ் காமன்மேன்!

நீட் தேர்வு: மீண்டும் வினாத்தாள் கசிந்தால் பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும்!

அமெரிக்கா உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திய ஈரான்!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



