சுவர்க்க வாசல் சேவை!

சுவர்க்க வாசல் சேவை!

ஒரு முறை பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால் பிரம்மாவை சிருஷ்டி செய்தார்.

ஒரு முறை பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால் பிரம்மாவை சிருஷ்டி செய்தார்.
 அந்த பிரம்மாவை சம்ஹாரம் செய்ய இரண்டு அசுரர்கள் வந்தனர். பிரம்மாவை காக்க திருமால் விரைந்தார். தங்களை வதம் செய்ய வந்த திருமாலிடம், ""நாங்கள் உம் அருளால் சித்தி பெற்று ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்ய வேண்டும்'' என்று வேண்டினார்கள் அசுரர்கள்.
 அதனை ஏற்ற திருமால், மார்கழி சுக்ல ஏகாதசியன்று வடக்கு நுழை வாயிலைத் திறந்து அதன் வழியாக சத்ய லோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அசுரர்களை அனுப்பி வைத்தார்.
 அவர்கள் மகிழ்ந்து, ""எங்களுக்கு அருள்புரிந்த மார்கழி சுக்ல ஏகாதசியை பூவுலகில் திருக்கோயில்களில் சுவர்க்க வாசல் திருவிழாவாகக் கொண்டாட
 வேண்டும்.
 அந்த நன்னாளில் சுவர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் எம்பிரானை தரிசிப்பவர்களுக்கும், பகவானுடன் அவ்வாசல் வழியாக வெளியே வருபவர்களுக்கும் மோட்சமளிக்க வேண்டும்'' என்று வேண்டிக் கொண்டனர்.
 அதன்படி திருக்கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சுவர்க் கவாசல் சேவை நடைபெறுகிறது.

 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com