கூப்பிட்ட குரலுக்கு வருவான்!

கஜேந்திரன் என்ற யானையை முதலையிடமிருந்து திருமால் காப்பாற்றிய சரித்திரம் கஜேந்திர மோட்சம் என்று பலராலும் கொண்டாடப்படுகின்றது.
கூப்பிட்ட குரலுக்கு வருவான்!

கஜேந்திரன் என்ற யானையை முதலையிடமிருந்து திருமால் காப்பாற்றிய சரித்திரம் கஜேந்திர மோட்சம் என்று பலராலும் கொண்டாடப்படுகின்றது. பல தலங்களும் கஜேந்திர மோட்ச வைபவத்தைத் தல வரலாறாகக் கொண்டவை. அவற்றில் ஒன்றுதான் விளாங்காடு.

கபித்தாரண்ய சேக்ஷத்திரம் என்ற பெயருடன் சென்னைக்கு தெற்கே, அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆகிய ஊர்களுக்கு 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இத்தலம் கஜேந்திர மோட்சத் தலமாகவும், நாரத முனி ஸ்ரீபிருகு மஹரிஷிக்கு நவகிரஹ மண்டல ரகசியங்களை போதித்த தலமாகவும் கொண்டாடப்படுகிறது. கருடன் மற்றும் ஆதிசேஷனின் அருள் தரும் தலமாகவும் கருதப்படுகிறது. சர்ப்பதோஷங்கள், பித்ரு தோஷங்களிலிருந்து விலக்கி அருள்புரியும் பிரார்த்தனைத் தலமாகவும் விளங்குகிறது விளாங்காடு. இங்கு அருள்புரியும் பெருமாளின் திருநாமம் ஸ்ரீஆதிமூல நாராயணப் பெருமாள். இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள சிலா உருவங்கள் பூமியிலிருந்து ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டவை. தல தீர்த்தம் தாமரைக் குளம்.

 இந்நிலையில் இத்திருக்கோயிலை ஆகம முறைப்படி திருப்பணி செய்ய ஊர்மக்கள் முடிவு செய்துள்ளனர். யானையின் குரலுக்கு ஓடி வந்து அருளிய ஆதிமூலநாராயணன் தன்னை வழிபடும் பக்தர்களுக்கும் நல்லருள் புரிவானன்றோ!

தகவலுக்கு: 98842 51427.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com