தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

நம்பிக்கையோடு மன்றாடுவோம்!

இயந்திரத் தனமான இவ்வுலக வாழ்க்கை எப்போது சுவையுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமாகவும்

News image
Updated On :24 ஜனவரி 2013, 7:04 am

பிலோமினா சந்தியநாதன்

இயந்திரத் தனமான இவ்வுலக வாழ்க்கை எப்போது சுவையுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமாகவும் மாறுகிறது? இடையிடையே குடும்பங்களில் நடைபெறும் மங்களகரமான நிகழ்வுகளின்போதுதான். பிறந்த நாள் விழாவோ, திருமணமோ, பெயர் சூட்டு வைபவமோ, புதுமனை புகு விழாவோ அல்லது மண நாள் கொண்டாட்டமோ எந்தவொரு நிகழ்ச்சிக்கும் மணிமகுடமாகத் திகழ்வது அத்தகைய வைபவங்களில் நடைபெறும் விருந்து உபசாரம்தான்.

விருந்தின்போது எவ்வாறு நடந்துகொள்வது என்பது பற்றி பைபிளில் கூறப்பட்டிருக்கிறது. ""நீ விருந்துக்கு தலைவனாக ஏற்படுத்தப்பட்டிருக்கும்போது இறுமாப்புக் கொள்ளாதே. விருந்தினர்களுள் ஒருவனாக நடந்துகொள். முதலில் மற்றவர்களை கவனி. பிறகு பந்தியில் அமர்ந்துகொள்.  விருந்தின்போது இன்னிசையைத் தடை செய்யாதே. விருந்தில் அமையும் இன்னிசை நிகழ்ச்சி பொன் அணிகளில் இருக்கும் மாணிக்க முத்திரை போன்றது (சீராக் 32:1,5)''.

விருந்தில் கலந்துகொள்வோர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? இதற்கும் பைபிளில் பதில் காணலாம். ""பலர் நடுவே நீ பந்தியில் அமர்ந்திருக்கும்போது மற்றவருக்கு முன் உண்ணத் தொடங்காதே. அளவின்றி உண்போருக்கு தூக்கமின்மை, குமட்டல், கடும் வயிற்று வலி ஆகியவை உண்டாகும். உனக்கு முன் வைக்கப்பட்டவற்றை பண்புள்ள மனிதர் போன்று சாப்பிடு. பேராசையோடு விழுங்காதே. இல்லையேல் நீ வெறுக்கப்படுவாய் (சீராக் 31:16,18,20)''.

இயேசு கலந்துகொண்ட ஒரு திருமண விருந்தைப் பற்றி நாம் யோவான் நற்செய்தியில் காண்கிறோம். எவ்வளவுதான் திட்டமிட்டு செயல்பட்டாலும், சில சமயம் எதிர்பாராத சிக்கல்களில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நிலை நேர்கிறதல்லவா! அதேபோன்றுதான் இயேசு கலந்துகொண்ட கானாவூர் திருமண விழாவின்போது நடந்தது. அக்கால யூதர் மரபுப்படி திருமண விழாவின்போது பரிமாறப்படும் திராட்சை இரசம் முக்கிய இடம் பெற்றிருந்தது. விருந்தின் இடையே பரிமாறப்பட்டுக் கொண்டிருந்த திராட்சை இரசம் திடீரென தீர்ந்து போனதை அறிந்த அன்னை மரியாள் தன் மகனிடம் அதைப் பற்றிக் கூறினாள். "எனது நேரம் இன்னும் வரவில்லையே' என்று கூறிய போதும் தன் அன்னையின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, ஆறு கற்சாடிகளில் தண்ணீர் நிரப்புமாறு பணியாளர்களிடம் கூறினார் இயேசுபிரான். பின்னர் அதை சுவை மிகுந்த திராட்சை இரசமாக மாற்றி விருந்தில் பரிமாறுமாறு கூறினார் (யோவான் 2:1-11).

நாமும் இறைவனிடம் முழுநம்பிக்கையோடு மன்றாடிய பின் எந்தக் காரியமும் தவறாக மாறுவதற்கு இடமேயில்லை என்பதையே மேற்கண்ட நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது. நாமும் நம்பிக்கை கொள்வோம். அப்போது நினைத்த காரியம் நிறைவேறத் தடையேதுமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.