அக்டோபர் மாதம் முழுவதும் செபமாலை அன்னையின் பெருவிழாவைக் கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
அன்னையின் அன்பு எத்தகையோரிடம் உள்ளது என்பதை ஒரு சிறு உண்மை நிகழ்வு மூலம் அறியலாம்.
ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்த ஓர் இளம்பெண் தாயை இழந்தவள். ஆடுகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தாள். எப்போதும் கையில் செபமாலை, வாயில் செபங்கள் சொல்லிக் கொண்டே, காடு மேடெல்லாம் ஆடுகளை மேய்த்துக் கொண்டே வருவாள்.
ஒரு நாள் காட்டிற்குள் வெகு தொலைவு சென்றுவிட்டாள். அப்போது அங்கே ஒரு காட்சியை கண்டாள். பாழடைந்த ஓர் ஆலயத்தில் அன்னை மேரியின் அழுக்குப் படிந்த அழகிய சுரூபம் கிடப்பதைக் கண்டு ஆனந்தம் கொண்டாள். ஓடோடிச் சென்று சுரூபத்தை தன் துணியால் துடைத்து அந்த பீடத்தையும் சுத்தம் செய்தாள்.
அன்று முதல் அன்னை மேரிக்கு தினசரி ஜெபமாலை, காட்டு மலர்கள் பறித்து, அலங்கரித்து மகிழ்ந்து வந்தாள். காலம் உருண்டோடியது. ஆண்டுகள் பல கடந்தன. ஒரு நாள் உடல் சுகமில்லாமல் படுத்த படுக்கையாகி விட்டாள். ஆடுகளை மேய்க்கவும் செல்ல முடியவில்லை.
அச்சமயத்தில் துறவியர் இருவர் அவ்வழியே பயணம் வந்தனர். பயணக் களைப்பால் ஒரு மர நிழலில் இளைப்பாறினர். ஒருவர் உறங்கிவிட்டார். அடுத்தவர் அமர்ந்திருந்தார். திடீரென ஒளி வெள்ளத்தை கண்டு உறங்கியவர் விழித்தெழுந்தார்.
தூரத்தில் ஒளி வெள்ளம் தெரிவதைக் கண்டு, இருவரும் சென்றனர். அந்த ஏழைப் பெண்ணின் குடிசையை அந்த அதிசய ஒளி சூழ்ந்திருந்தது.
அன்னை மேரி, அந்த ஏழைப் பெண்ணின் அருகில் அமர்ந்து அவளைத் தேற்றிக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டனர்.
இயேசுவின் திருப் பெயரை மகிழ்வுடன் கூறிய அந்தப் பெண் அன்னையின் அருளால் விண்ணகப் பேறு பெறும் காட்சியைக் கண்டனர். துறவியர் இருவரும் மாதாவின் அன்பை வியந்தவண்ணம் தங்களது பயணத்தைத் தொடர்ந்
தனர். செபமாலையை பக்தியோடு செபிக்கத் தொடங்கினாலே துன்பங்கள் பறந்து ஓடும். அம்மா என்று அழைப்பவர் மனதில் மகிழ்வு குடி கொள்ளும். அவர்களது ஆன்மா வளம் பெறும். பிணிகள் நீங்கும். பிரச்னைகள் தீரும். துன்ப துயரங்கள் விலகும். அனைத்து ஆசீர்களும் வந்தடையும் என்கிறார் தேம்பாவானி ஆசிரியர் வீரமாமுனிவர். ஜெபமாலையை அனுதினமும் செபிப்போம். அன்னையிடம் சரணடைவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல்: பட்டாசு கடைகளை மூட உத்தரவு

பணியின்போது கீழே விழுந்து லேத் உரிமையாளா் உயிரிழப்பு

பஞ்சு பேல் ஏற்றிவந்த வேன் தீயில் எரிந்து சேதம்

தோ்தல் நாளன்று மாற்றுத்திறனாளிகள், முதியோா் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

