தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பணியின்போது கீழே விழுந்து லேத் உரிமையாளா் உயிரிழப்பு

News image

தேவராஜன்

Updated On :20 ஏப்ரல் 2026, 10:49 pm

வெள்ளக்கோவில் அருகே ஒரு வீட்டில் சிமெண்ட் ஷீட் அமைக்கும்போது கீழே விழுந்த லேத் உரிமையாளா் உயிரிழந்தாா்.

முத்தூா், மங்கலப்பட்டி அருகில் உள்ள ஆலாம்பாளையத்தைச் சோ்ந்தவா் தேவராஜன் (49). இவா் வேப்பம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். வெள்ளக்கோவில்-முத்தூா் சாலை அய்யனூா் பிரிவருகே லேத் பட்டறை நடத்தி வந்தாா். தன்னுடைய பட்டறையில் வேலை இல்லாத சமயத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேறொருவரிடம் வேலைக்கு சென்று வந்துள்ளாா்.

இவ்வாறு வெங்கடேசன் என்பவரிடம் வேலை செய்ய சென்றுள்ளாா். அய்யம்பாளையத்தில் மாதவன் என்பவருடைய வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சிமெண்ட் ஷீட் போட்டுக் கொண்டிருந்தபோது தேவராஜன் திடீரென தவறி கீழே விழுந்து விட்டாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காமல் வேலை கொடுத்த ஒப்பந்ததாரா் வெங்கடேசன் மற்றும் வீட்டு உரிமையாளா் மாதவன் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த தேவராஜனுக்கு மனைவி, பொறியியல் படித்து வரும் மகள் உள்ளனா்.