இடைவிடா சகாயமாதா!
சகாயமாதா என்று போற்றப்படும் இயேசுவின் அன்னை மரியாளின் இந்தப் படம், முதன் முதலில் விவிலிய நற்செய்தியாளரான லூக்கா வரைந்ததாக பாரம்பரிய வரலாறு கூறுகிறது.


சகாயமாதா என்று போற்றப்படும் இயேசுவின் அன்னை மரியாளின் இந்தப் படம், முதன் முதலில் விவிலிய நற்செய்தியாளரான லூக்கா வரைந்ததாக பாரம்பரிய வரலாறு கூறுகிறது.
ஆனால் இதில் இடம்பெற்றுள்ள தூய மிக்கேல் அதிதூதர் மற்றும் தூய கபிரியேல் அதிதூதர் மற்றும் பைசான்டின் முறை கிரேக்க எழுத்துக்கள் தூய லூக்காவின் ஓவியத்தில் இல்லாததால் அதைத் தழுவி இவ் ஒவியம் கீழ்த்திசை கலைப் பண்பிலிருந்து வந்திருக்கக் கூடும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
இந்த ஓவியமானது 1325-1480 ஆண்டுகளுக்குள் தீட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். கீரிட் தீவிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ரோமாபுரிக்குக் கொண்டுவரப்பட்டது.
இதன் வருகைக்குப் பிறகு, ரோமாபுரியில் பல அற்புத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேவதாய் ஒரு சிறுமிக்குக் காட்சியளித்தது அவற்றுள் ஒன்றாகும். தேவதாய் அந்தச் சிறுமியிடம், இந்த ஓவியம், ரோமாபுரியில் உள்ள புனித மரியன்னையின் பேராலயத்துக்கும் புனித யோவான் பேராலயத்துக்கும் இடையே அமைக்கப்படவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இவ்விரு பேராலயங்களுக்குமிடையே புனித மத்தேயுவின் ஆலயம் அமைந்திருந்தது. அன்னையின் கட்டளைப்படி, அந்த ஆலயத்தின் பீடத்துக்குமேல் இந்தப் புனித படம் ஸ்தாபிக்கப்பட்டது.
மூன்று நூற்றாண்டுகளாக (1499-1798) இந்த அற்புதப் படம் தூய மத்தேயு ஆலயத்தில் வணங்கப்பட்டு வந்தது. ரோமாபுரியில் "இடைவிடா சகாயத்தாய்' எனும்
பெயரில் இந்தப் படத்தில் உள்ள அன்னைக்குப் பெயர் சூட்டப்பட்டு, வணங்கப்பட்டது.
ஏனெனில் தேவதாய் அந்த சிறுமிக்கு அளித்த காட்சியில், தனது படம் மக்களின் வணக்கத்துக்கு உரியதாக்கப்பட வேண்டும் என்று அறிவித்தபோது, தான் இடைவிடா சகாய மாதா என்று தெரிவித்திருந்தார்.
அன்றிலிருந்தே நாம் இந்த அன்னையை "இடைவிடா சகாயமாதா' அல்லது "சதா சகாயமாதா' என்றழைத்து வருகிறோம்.
1798-ஆம் ஆண்டு புனித மத்தேயுவின் தேவாலயம் பிரஞ்சுக்காரர்களின் படையெடுப்பால் அழிக்கப்பட்டது. ஆலயத்தைக் கண்காணித்து வந்த புனித அகுஸ்தின் சபைக் குருக்கள் இந்தப் படத்தை அன்மையில் இருந்த ஒரு துறவற மடத்துக்கு மாற்றினார்கள். 1866-ஆம் ஆண்டு வரை இந்தப் படம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அழிக்கப்பட்ட புனித மத்தேயுவின் பழைய ஆலயம் இருந்த இடத்தில் இரட்சகர் சபைக் குருக்களால் தூய அல்போன்சா ஆலயம் புதிதாகக் கட்டப்பட்டது.
இறைவனது கருணை நிறைந்த பராமரிப்பின் பயனாக இந்த அற்புதப் படம் கண்டுபிடிக்கப்பட்டது. புனித பாப்பரசர் 9-ஆம் பத்திநாதர் இந்தப் படத்தின் வரலாற்றை அறிந்தார்.
அவருடைய கட்டளையின் பேரில் 1866-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29-ஆம் நாள் அன்னையின் இந்தத் திருவுருவப்படம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, தூய அல்போன்சா ஆலயத்தில் மறுபடியும் மகிமைக்குரிய அதன் பழைய இடத்திலேயே நிறுவப்பட்டது.
அந்த சமயத்தில்தான் இந்தப் படத்திலிருக்கும் இடைவிடா சகாயத்தாயை அனைத்துலகும் அறியும்படி செய்யுங்கள் என்று கட்டளையிட்டார்.
அன்றுமுதல் இந்த அன்னை உலகெங்கும் பல வடிவங்களில் எடுத்துச் செல்லப்பட்டு மக்களுக்காக இறை இயேசுவிடம் மன்றாடிப் பலவிதமான அற்புதங்களைச் செய்து வருகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...