குழந்தைகளாய் மாறுங்கள்...
குழந்தைப் பருவம் என்பது மாசற்ற பருவம். "நான் குழந்தையாய் இருந்தபோது நல்லியல்புடன் இருந்தேன். நல்ல உள்ளம் என்னிடம் குடிகொண்டிருந்தது' என்று கூறுகிறது சாலமோனின் ஞானநூல்.


குழந்தைப் பருவம் என்பது மாசற்ற பருவம். "நான் குழந்தையாய் இருந்தபோது நல்லியல்புடன் இருந்தேன். நல்ல உள்ளம் என்னிடம் குடிகொண்டிருந்தது' என்று கூறுகிறது சாலமோனின் ஞானநூல்.
குழந்தைகளை இறைவன் அன்பு செய்கிறார். "இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன். எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்' (ஓசே 11:1) என்னும் இறைவார்த்தை குழந்தைகள் மீது இறைவன் கொண்டிருந்த அளவற்ற அன்பை எடுத்துக்காட்டுகிறது.
இயேசுவும் குழந்தைகளை மிகவும் நேசித்தார். அவர்களுக்கு ஆசி வழங்கினார். "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் தெரியாதவற்றை குழந்தைகளுக்கு அளித்தீர்' (மத் 11:25) என்று குழந்தைகளுக்காக இறைவனைப் போற்றினார்.
அது மட்டுமல்ல, நாம் அனைவருமே மனதளவில் குழந்தைகளாக மாறவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். "இறையாட்சியைச் சிறுபிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்குள் (அதாவது சொர்கத்துக்கு) நுழைய மாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' (மாற்கு 10:15) என்று சொல்லி அந்த அழைப்பை உறுதிப்படுத்தினார்.
இயேசுவைப் பின்பற்றி வாழ்ந்த தூய பவுல் தமது அறிவுரையில் "தீங்கு செய்வதில் குழந்தைகள் போலவும், சிந்திப்பதில் முதிர்ச்சி அடைந்தவர்கள் போலவும் இருங்கள்' என்கிறார்.
தூய பேதுருவும் இதையே, "புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்றவர்களாக இருங்கள்' என்று கூறுகிறார்.
இயேசு தான் யார் என்பதையும் தன் நிறைகள், ஆற்றல்கள் என்ன என்பதையும் நன்கு அறிந்திருந்தார். எல்லா மனிதர்களையும் போல, இயேசுவும் தனது குழந்தைப் பருவத்தில் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்து வந்தார். தமது தந்தையின் தச்சுத் தொழிலில் அவருக்கு எல்லாவிதத்திலும் உதவிகள் செய்து வாழ்ந்து வந்தார்.
அப்படி வாழ்ந்ததால்தான் அவருக்கு, அவருடைய உண்மையான மதிப்பு தெரிந்திருந்தது. அந்த மனநிலை அவர் வளர்ந்து பெரியவரான பிறகும் தொடர்ந்தது. அதனால்தான் அவர் குழந்தைகளை மிகவும் நேசித்தார்.எனவே, நாமும் குழந்தைகளைப்போல மாறி, குற்றம் செய்யாதவர்களாக, ஒருவர் ஒருவருடன் இன்முகத்தோடு பழகி வாழ்வோமாக! இயேசு வழங்கும் அமைதியை, ஆசியைப் பெற்றுக்கொள்வோமாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...