தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வாழ்வை உயர்த்தும் விருந்தோம்பல் பண்பு

விருந்தோம்பல் மிகச் சிறந்த நற்பண்பு. விருந்தோம்பும் பண்புடையவர் தெய்வ பண்புடையவர். விருந்தோம்பல் இருவகைப்படும். உணவு

News image
Updated On :5 பிப்ரவரி 2016, 6:17 am

முனைவர் தே. பால் பிரேம்குமார்

விருந்தோம்பல் மிகச் சிறந்த நற்பண்பு. விருந்தோம்பும் பண்புடையவர் தெய்வ பண்புடையவர். விருந்தோம்பல் இருவகைப்படும். உணவு தந்து உடலுக்கு உதவுபவர், ஆன்மாவுக்கு (உயிருக்கு) சொல்லினால் ஆறுதல் செய்வதும் விருந்தோம்பல் நட்புடன் இன்சொல்பேசி சுவைமிக்க விரும்பும் உணவை திருப்தி அடையும் வரை பரிமாறுவதும் சிறந்த விருந்தோம்பல்.

தண்ணீர் பந்தல், சுமைதாங்கி அமைத்தல் தமிழ்நாட்டின் விருந்தோம்பும் பண்பு ஆகும்.  முன்பின் தெரியாத வழிபோக்கருக்கு தாகம் தீர குடிநீரும் சுமை இறக்க சுமைதாங்கியும் சிறந்த விருந்தோம்பல்.

வேதாகமத்தில் விருந்தோம்பல் பற்றி பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. ஆபிரகாம் மதிய வேளையில் மர நிழலில் உட்கார்ந்தபோது தம் எதிரே வந்த மூன்று பேரை விருந்தோம்பலுக்கு அழைத்து (ஆதியாகமம் 181-10) மிக சிறந்த உணவை படைக்கின்றார். தேவதூதர்கள் என்று அரியாமலே விருந்தோம்புகின்றார். வந்தவர்கள் வயதான ஆபிரகாமையும் அவன் மனைவி சாராளையும் ஆசீர்வதித்து ""ஒரு உற்பவ காலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன். அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்'' என்றார். அவர் தொழும் தெய்வமே வந்து பிள்ளை வரம் தந்தார். விருந்தோம்பல் அவர்கள் நீண்ட நாள் குறைவை தீர்த்தது.

வேதாகமத்தில் தீர்க்கதரிசியாகிய எலிசா, சூனேமுக்கு போயிருக்கும்போது, அங்கேயே கனம் பொருந்திய ஒரு ஸ்திரீ அவரை போஜனம் பண்ண வருந்திக் கேட்டு கொண்டாள். அப்படியே எலிசா பயணப்பட்டு

வருகிறபோதெல்லாம் அங்கே வந்து தங்குவார். சூனேமியாளோ எலிசாவிற்கு மாடியில் ஓர் அறை கட்டி, கட்டிலும் மெத்தையும் நாற்காளியும் விளக்கு, பருக தண்ணீர் வைத்து எலிசா சீனேமுக்கு வரும்போதெல்லாம் விருந்தோம்பி உபசரித்தாள். எலிசா அவளின் விருந்தோம்பலுக்கு மகிழ்ந்து ஏதாகிலும் உதவி செய்ய விரும்பினார். ( இராஜ:4: 8-37) அவளுக்குப் பிள்ளை இல்லை. அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன். ""எலிசா ஒரு பிராண உற்பத்தி காலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாய்'' என்றார்.

பிள்ளை வளர்ந்து ஒருநாள் திடீர் என்று மரித்து போயிற்று. மரித்து போன பிள்ளையை மாடியில் உள்ள எலிசா கட்டிலில் படுக்க வைத்து எவருக்கும் பிள்ளை மரித்த செய்தியை சொல்லாமல் எலிசா தீர்க்கத்தரிசியிடம் சென்றாள். எலிசா அவளுடன் வீட்டிற்கு வந்து கதவைப் பூட்டி கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து, தன் உடல் சூடு பிள்ளைக்கு வரும்படியாக அதன்மேல் படுத்தார். பிள்ளை அனல் கொண்டு ஏழு தரம் தும்பி உயிர் பெற்றது. சூனேமியாளின் விருந்தோம்பல் அவளது குழந்தை இல்லாத குறையையும் அந்தக்குழந்தை மீண்டும் உயிர் பெறவும் செய்தது. 

இயேசுவும் சிறந்த விருந்தோம்பும் பண்புடையவராக விளங்கினார். (யோவான்: 6:1-13) ஒருசமயம், இயேசு கலிலேயாக் கடற்கரையில் மூன்று நாள்கள் போதித்தார். உணவும் தண்ணீரும் இல்லாத மூன்று நாள்களுக்குப்பிறகு எல்லாரும் பசியுடன் இருந்தனர்.

இயேசு எல்லாருக்கும் விருந்தோம்பிட விரும்பினார்.

அப்போது ""இங்கே ஒரு பையன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கின்றன'' என்றனர்.

இயேசு அந்த சிறுபையனின் நற்பண்பை பாராட்டி, எல்லா மக்களையும் பந்தி அமர செய்தார்.  அப்பத்தை எடுத்து ஸ்தோத்தரித்து பிட்டு பரிமாற கொடுத்தார். என்ன அற்புதம்! ஏறக்குறைய 20,000 பேர்கள் வேண்டிய மட்டும் உண்டார்கள். சாப்பிட்ட பிறகு அப்பமும் மீனும் மீதியாக பன்னிரெண்டு கூடை நிரம்பியது.

சென்னை மழை வெள்ளத்தில் கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவி செய்தவர்களின் உணவு,  குடிநீரும் வழங்கிய நற்பண்பு சிறப்பாக பேசப்பட்டது. நாமும் விருந்தோம்பல் நற்பண்பை வளர்ப்போம். சக மனிதருக்கு மட்டுமல்ல, பறப்பன, ஊர்வன மிருகங்களுக்கு உணவூட்டுவோம். விருந்தோம்பி உண்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.