அபய ப்ரதானம் என்றால் என்ன?
விபீஷணன் மிகவும் பயந்த நிலையில் ஸ்ரீ ராமரிடம் சரணடைகிறான். ஸ்ரீ ராமர் விபீஷணின் பயத்தைப் போக்கி, " அபய ப்ரதானம்' வழங்குகிறான்.


* ஒருவன் மிகவும் பயந்து போயிருக்கிறான். அவன் மற்றொருவனிடன் பூரணமாகச் சரணடைந்து, "என்னைக் காப்பாற்றுங்கள்!'' என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறான். அவனை ஒருவன், " நீ பயப்படாதே, உன்னுடைய துன்பத்திலிருந்து நான் உன்னை விடுவிக்கிறேன்'' என்று கூறுகிறான். அவ்விதம் கூறுபவன் தன்னிடம் சரணடைந்தவனுக்கு "அபய ப்ரதானம்' செய்கிறான்.
* விபீஷணன் மிகவும் பயந்த நிலையில் ஸ்ரீ ராமரிடம் சரணடைகிறான். ஸ்ரீ ராமர் விபீஷணின் பயத்தைப் போக்கி, " அபய ப்ரதானம்' வழங்குகிறான்.
* அதுபோல் மகாபாரதப் போர் துவங்கியபோது, அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனிடம் சரணடைகிறான். அப்போது ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு, "அபய ப்ரதானம்' வழங்குகிறான்.
* தமது கோயில்களில் தேவ - தேவியர்களுக்கு "அபய கரம், வரம் தரும் கரம்' ஆகியவை இருக்கின்றன. இவற்றில் " அபய கரம்' தன்னை வழிபடும் பக்தர்களுக்கு "அபய ப்ரதானம்' வழங்குவதைக் குறிக்கும்.
* "பயம்' என்றால் "அச்சம்', அச்சமற்ற நிலையை, தன்னிடம் சரணடைந்தவனுக்கு ஒருவன் வழங்குவது "அபய ப்ரதானம்' எனப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...