இயேசுவின் ஏழு வார்த்தைகள்
இயேசுவை சிறை பிடித்த ஆசாரியரும் யூதர்களும் அவரை மரண தண்டனைக்கு ஆணையிடும்படி தேசாதிபதியாகிய பிலாத்துவிடம் கொண்டு போகப்பட்டார்.


இயேசுவை சிறை பிடித்த ஆசாரியரும் யூதர்களும் அவரை மரண தண்டனைக்கு ஆணையிடும்படி தேசாதிபதியாகிய பிலாத்துவிடம் கொண்டு போகப்பட்டார். பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான். இயேசுவின் உடல் எல்லாம் வாரினால் முதல் காயம் உண்டாயிற்று. போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு கிரீடத்தை பின்னி அவர் சிரசின் மேல் வைத்து சிவப்பான ஓர் அங்கியை அவருக்கு உடுத்தி "யூதருடைய ராஜாவே வாழ்க' என்று சொல்லி அவரை கையினால் அடித்தார்கள். (யோவான் 19: 1-3)
சிரசின் மேல் வைக்கப்பட்ட முள் முடியில் உள்ள முட்கள் அவர் தலை முழுவதும் குத்தி பலமான காயங்களை ஏற்படுத்தியது. இது இரண்டாவது பெரிய காயம். பிலாத்து மரண தண்டனையை நிர்பந்தத்தால் இயேசுவுக்கு வழங்கிய உடன் பார சிலுவையை இயேசுவை சுமக்கும்படி செய்து கொல்கதா எனப்படும் இடத்திற்கு கொண்டு போனார்கள்.
அங்கே இயேசுவை சிலுவையின் மீது கிடத்தி வலது கையில் கூர்மையான ஆணி அடித்து பலமான மூன்றாம் காயத்தை ஏற்படுத்தினார்கள். இடது கையை இழுத்து பிடித்து கூர்மையான ஆணியால் அடித்து மரத்தோடு சேர்த்து அடித்து நான்காவது பலமான காயத்தை ஏற்படுத்தினார்கள். இரு கால்களையும் சேர்த்து வைத்து கூர்மையான நீண்ட ஆணியால் மரத்தோடு சேர்த்து அடித்தார்கள். இரு கால்களிலும் ஐந்தாவது ஆறாவது பலத்த காயம் ஏற்படுத்தினார்கள். ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவிலே குத்தினான். இவ்வாறு பலமான ஏழு காயங்களை இயேசுவுக்கு உண்டாக்கினார்கள். அவரின் பரிசுத்த ரத்தம் பலியாக சிந்தப்பட்டது.
ஆண்டவராகிய இயேசு சிலுவையில் தொங்கும்போது ஏழு வார்த்தகளை மொழிந்தார்.
முதலாம் வார்த்தை: அப்பொழுது இயேசு, ""பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே'' என்றார் (லுக்கா 23; 34) தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்கு மன்னிப்பு பெற்று தருகிறார்.
இரண்டாம் வார்த்தை: "" இயேசு கள்வனை நோக்கி இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்'' என்றார். (லுக்கா :23:43)தம்மை நோக்கி விண்ணப்பித்த
கள்வனுக்கு பரதீசுயை தருகின்றார்.
மூன்றாம் வார்த்தை: இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற அன்பாயிருந்த சீடனை நோக்கி, "" அதோ உன் மகன் என்றார்; அதோ உன் தாய்'' என்றார். (யோவான் 19: 27) தம்மைப் பெற்ற தாய்க்கு அடைகலம் தந்தார்.
நான்காம் வார்த்தை: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்'' என்றார். தம் பிதாவால் தாம் கைவிடப்பட்டதை உணர்ந்து கேட்கின்றார்.
ஐந்தாம் வார்த்தை: "" தாகமாயிருக்கிறேன்'' என்றார். (யோவான் 19: 28) நா வரண்ட தாகத்துக்கு குடிக்க கேட்டார்.
ஆறாம் வார்த்தை: இயேசு காடியை வாங்கின பின்பு ""முடிந்தது.."" என்று சொல்லி தலையை சாய்த்தார். (யோவான் 19: 30) தம் பணியை முடித்து முடிந்தது என்று உறைத்தார்.
ஏழாம் வார்த்தை: இயேசு, "" பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்'' என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார். இப்படி சொல்லி ஜீவனை விட்டார் (லுக்கா 23:46)
புனித வெள்ளி இன்று இயேசு ஏழு காயங்களையும் ஏற்று ஏழு வார்த்தைகளையும் சிலுவையில் மொழிந்து நம்மை மன்னித்து கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையை தந்தார். இயேசுவின் பாடு, மரணம், ரத்தம் சிந்துதல், நம்மை கடவுளோடு இணைத்தது; நாமும் மனதுருகுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...