தேவன் நம்மை உயர்த்தவே துன்பங்களை அனுமதிக்கிறார்!

நம் வாழ்வு  இன்பமும் துன்பமும்  நிறைந்தது.  யாராய்  இருந்தாலும்  துன்பத்தையும்  இன்னலையும்  அனுபவிப்பர்.
தேவன் நம்மை உயர்த்தவே துன்பங்களை அனுமதிக்கிறார்!


நம் வாழ்வு இன்பமும் துன்பமும் நிறைந்தது. யாராய் இருந்தாலும் துன்பத்தையும் இன்னலையும் அனுபவிப்பர். நோய், வறுமை, இயற்கை சீற்றம், விபத்துகள், மற்றவர்களால் வரும் துன்பம், கொடுங்கோல் ஆட்சியர்களால் வரும் துன்பம் என எத்தனை எத்தனையோ. இத்துன்பங்கள் மனிதனை வாட்டும்படி இறைவன் அனுமதிக்கின்றார். ஒரு இரும்பு கொல்லன் இரும்பை காய்ச்சி சம்மட்டியால் அடித்து, வேண்டிய ஆயுதம் செய்வதுப் போன்று பொன் தட்டான் பொன்னை உருக்கி வேண்டிய ஆபரணம் செய்வதுப்போல் பிரயோஜனமான பாத்திரம் வடிவமைக்க தொய்வும் அனுமதிக்கிறது.
வேதாகமத்தில் யோசேப்புவை பல துன்பங்களை அனுபவிக்கும்படி செய்தார். தன் அண்ணன்களின் ஏளன பேச்சு மற் றும் பாழ் கிணற்றில் தள்ளப்படவும், பின்பு எகிப்துவுக்கு அடிமையாக விற்றுவிடவும், செய்யாத குற்றத்துக்கு பாதாள சிறையில் வைக்கப்படவும். பின்பு எகிப்து பேரரசன் பார்வோனின் சொப்பனத்துக்கு பொருள் சொல்லி எகிப்தின் முதன்மை அதிகாரியானார். தமது முப்பது வயது வரை அவரின் துன்பம் மிகவும் கொடுமையானது. யோசேப்போ, என்ன வந்தாலும் தம் தெய்வ பக்தியையும், உண்மையையும், உத்தமத்தையும் கைவிடவில்லை. மேலும், எகிப்தில் செழுமை காலத்தில் களஞ்சியங்களைக் கட்டி தானியங்களை சேமித்து வந்தார். ஏழு ஆண்டுகளுக்கு பின்பு கொடிய பஞ்சம் வந்தது. தானியம் இல்லா மக்களுக்கு தான் சேமித்து வைத்த தானியங்களை விற்றதன் மூலம் பார்வோனின் கஜானா நிரம்பியது.
இப்பஞ்சம் கானான் தேசத்தையும் பிடித்தது. யாக்கோப்பின் பிள்ளைகள் பத்து பேரும் தானியம் வாங்க எகிப்துக்கு வந்தனர். யோசேப்பைக் கண்டு முகங்குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கினர்.
யோசேப்போ அவர்களை வேவுக்காரர் என்று சொல்லி மிரட்டி, கோதுமை தந்து அவர்களின் சாக்குப்பைகளில் அவர்கள் கொடுத்த பணத்தையும் போட்டுவிட்டு, அடுத்து வரும்போது வீட்டில் உள்ள உங்கள் இளைய தம்பி பென்யமீனை அழைத்து வரும்படி சொன்னார்.
தேசத்தில் பஞ்சம் கொடுமையாக இருந்தது. கொண்டு வந்த தானியங்கள் தீர்ந்து போயின. எகிப்துக்கு போக வேண்டுமானால் பென்யமீனை அழைத்து வர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம் ( ஆதியாகமம் 43: 1-5) யாக்கோபுக்கு உத்திரவாதம் தந்து அழைத்து போயினர்.
தன் அண்ணன்களுடன் தன் தம்பியை கண்ட மாத்திரத்தில் துக்கம் தாளாமல் அழுதார். ஆனாலும்தான் யோசேப்பு என்பதை வெளிபடுத்தவில்லை. அவர்களுக்கு உணவு கொடுத்து சாக்குப்பைகளில் அவரவர் பணத்தைப் போட்டு பென்யமீனின் பையில் தன் பான பாத்திரத்தை போட்டுவிட்டார். அவர்கள் புறப்பட்டு போன பிறகு, தன் வேலைகாரனை அனுப்பி, "எங்கள் எஜமானின் பாத்திரத்தை திருடி கொண்டு வந்தீரோ' என கூறி பென்யமீனின் சாக்குப்பையில் இருந்த பாத்திரத்தை கண்டுபிடித்து திரும்ப அவர்களை யோசேப்பிடத்தில் கொண்டு வர செய்தார். "பென்ய மீனை அடிமையாய் விட்டுச் செல்லுங்கள்' என்றார்.
"ஐயோ, பென்யமீன் இல்லையெனில் எங்கள் தகப்பன் இறந்து போய்விடுவார்' என அழுது யோசேப்பின் பாதத்தில் விழ்ந்து அழுதனர்.
இதற்குமேல் யோசேப்புவால் உண்மையை வெளிபடுத்தாமல் இருக்க முடியவில்லை. மிகவும் பாசத்துடன் தன் சகோதரர்களை அணைத்து அழுதார். தான்தான் நீங்கள் விற்று விட்ட யோசேப்பு என வெளிப்படுத்தினார். பயந்து போன தன் அண்ணன்களை மன்னித்தார். "தன்னை தெய்வம்தான் இத்துன்பத்துக்கு அனுமதித்து, தற்போது எகிப்தின் முதன்மை அதிகாரியாய் உயர்த்தினார்' என கூறினார்.
பஞ்சகாலம் முடியும் வரை எகிப்துக்கு எல்லாரும் வந்திருக்கும்படி தன் அப்பாவின் குடும்பத்தை அழைத்தார். நம் துன்ப நேரத்தில் இறைவனை பற்றிக் கொள்வோம். யோசேப்பை உயர்த்தினது போல் நம்மையும் உயர்த்துவார். இறையருள் நம்மோடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com