எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நல்லருள் நாயகன் சுவாமி ஐயப்பன்

செங்கல்பட்டு நகரில் ஐயப்பன் கோயில் இல்லையே என்கிற பக்தர்களின் எண்ணத்தை நிறைவேற்ற ஐயப்ப சேவா சங்கத்தின் மூலம் கடந்த 1984 -இல் ஐம்பொன்னால் ஐயப்பன் சிலை உடைய கோயில் உருவாக்கப்பட்டது. 

News image
Updated On :26 ஜூன் 2020, 4:02 pm

மதுராந்தகம் குமார்


செங்கல்பட்டு நகரில் ஐயப்பன் கோயில் இல்லையே என்கிற பக்தர்களின் எண்ணத்தை நிறைவேற்ற ஐயப்ப சேவா சங்கத்தின் மூலம் கடந்த 1984 -இல் ஐம்பொன்னால் ஐயப்பன் சிலை உடைய கோயில் உருவாக்கப்பட்டது. 

இக்கோயிலைச் சுற்றி விநாயகர் சந்நிதி, குருவாயூரப்பன் சந்நிதி, துர்கையம்மன் சந்நிதி,  பாலமுருகன் சந்நிதி மற்றும் கொடிமரம், பலிபீடம் மற்றும் தியான மண்டபம் போன்றவை அமைந்துள்ளன. 

இக்கோயிலின் முக்கிய திருவிழாவாக ஆராட்டு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில்  கோதண்டராமர் திருக்கோயிலின் குளத்தில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியை மேல்சாந்தி நம்பூதிரி செய்து வைப்பார். பின்னர்  சிறப்பு அலங்காரத்துடன்  சுவாமி ஐயப்பனை யானை மீது வைத்து, சுமங்கலி பெண்கள் திருவிளக்குகள் ஏந்தியபடி வர, பஞ்சவாத்தியம் முழங்க முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு ஐயப்ப சுவாமி காட்சியளிப்பார். 

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நல்லருள் நாயகன் சுவாமி ஐயப்பனை வேண்டினால் ஐயப்பனே குழந்தையாகப் பிறப்பான் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.