பேசும் தெய்வமும் சிறுவன் சாமுவேலும்
இறைவன் மனிதரிடம் பேசுகின்றார். அவர் நம் தாய்மொழியிலேயே பேசுகின்றார். மிக அரிதாக தன்னிடம் கடவுள் பேசுகின்றார் என்பதை மனிதன் உணராமல் போகிறான்.


இறைவன் மனிதரிடம் பேசுகின்றார். அவர் நம் தாய்மொழியிலேயே பேசுகின்றார். மிக அரிதாக தன்னிடம் கடவுள் பேசுகின்றார் என்பதை மனிதன் உணராமல் போகிறான். முற்காலத்தில் மனிதன் இறைவனிடம் தனித்து இருந்து பேசும் அனுபவத்தைப் பெற்றார்கள். இன்றும் உலகிலுள்ள எல்லோரிடத்திலும் இறைவன் பேசுகின்றார்.
பாடல்கள் மூலம், இசை மூலம், நடனம் மூலம், செய்திகள் மூலமும் இறைவன் பேசுகின்றார். தெய்வம் கனவில் தோன்றி பேசுவதும் உண்டு. சாதாரண மனிதரிடமும் கடவுள் பேசுகின்றார். இறைவனை பேசும் தெய்வம் என்று போற்றுவர்.
வேதாகமத்தில் ஆதிமனிதன் ஆதாம், ஏவாளிடம் கர்த்தர் பேசினார். அதன்பின்பு இறை நம்பிக்கை கொண்ட மனிதரிடமும் பேசினார். மிகச் சிறப்பாக ஐந்து வயதேயான சிறுவன் சாமுவேலிடம் கர்த்தர் பேசிய நிகழ்ச்சி உண்டு.
சிறுவன் சாமுவேல் அன்னாள் என்பவரின் மூத்தமகன். தனக்கு பிள்ளை இல்லாத நிலையில், பிரார்த்தனை செய்து வேண்டிப் பெற்ற தன் மகனைப் பெருந்தன்மையுடன் ஆலயத்தில் ஆசாரியன் ஏலியிடம் கொண்டுவந்து கொடுத்து விட்டுச் சென்றாள். வேண்டுதலில் பிறந்த சாமுவேல் கருவிலேயே திருவுடையவர் தன் தாயையும், தந்தையையும் பிரிந்து ஆலயத்தில் விடப்பட்ட போது, "தான் இறைவனின் மகன். தன் வீடு ஆலயம். தன் தாயும் தந்தையும் கர்த்தரே. தன் பாதுகாவலர் ஏலி ஆசாரியரே' எனத் திட எண்ணம் கொண்டார்.
ஆலயத்துக்கு வருவோருக்கு மிக ஆச்சரியமாக இருக்கும். குட்டி ஆசாரியன் சாமுவேல் ஏபோத் என்னும் சணல் அங்கியை உடுத்தி, தோத்திரப் பாடல்கள் பாடி இறைவனிடம் ஜெபம் செய்வது எல்லோருக்கும் ஆச்சரியம் தரும். ஆலயத்துக்கு வருவோர் கொண்டு வரும் காணிக்கை பொருள்களை வாங்கி ஆலய பிராகாரத்தில் வைப்பதும், அவர்களிடம் இறைவன் ஆசியைக் கூறுவதும் மிகவும் மகிழ்ச்சியுடன் பிறர் பார்க்கும் காட்சியாகும்.
ஆலயத்தில் ஆலிவ் எண்ணெயால் தீபமேற்றி இரவு தொழுகையுடன் வரவேற்பார். ஆலயத்தில் கிடைக்கும் உணவை உண்டு, தீபம் அணைவதற்கு முன், ஏலி ஆசாரியன் தூங்கியதற்குப் பின் ஆலய பிராகாரத்தில் சாமுவேல் படுத்துறங்குவார்.
இரவு நடு ஜாமம். அப்பொழுது கர்த்தர் சாமுவேலை கூப்பிட்டார். தன் பெயர் சொல்லிக் கூப்பிடும் குரலுக்கு எழுந்து "ஏலி ஆசாரியர்தான் கூப்பிடுகிறார்' என்று எண்ணி அவரை எழுப்பி ""கூப்பிட்டீரோ?'' என்று வினவினான். ஆசாரியர் ""நான் கூப்பிடவில்லை... போய் படுத்துக் கொள்'' என்றார்.
சாமுவேல் உறங்கவும் மீண்டும் "சாமுவேல்' என்று அழைக்கும் குரல் கேட்டு முன்புபோலவே கூப்பிட்ட குரலுக்கு ஆசாரியரிடம் சென்று ""கூப்பிட்டீரோ?'' என்றான். தான் கூப்பிடவில்லை என்றார். இவ்வாறு மூன்று தடவை கர்த்தர் சாமுவேலை கூப்பிட்டார். மூன்றாம் முறை ஆசாரியரை சாமுவேல் எழுப்பியபோது "கர்த்தர்தான் சாமுவேலிடம் பேச அழைக்கின்றார்' என அறிந்து ""அடுத்த தடவை அழைக்கும்போது எழுந்து முழங்காலில் நின்று, "சொல்லும்... அடியேன் கேட்கின்றேன்' என்று கூறி கர்த்தர் சொல்லும் எல்லாவற்றையும் கேட்டுக் கொள். என்ன சொன்னாரோ அதை மறைக்காமல் என்னிடம் கூறு'' என்றார்.
ஆம். தெய்வம் சிறுவன் சாமுவேலிடம் பேசினார். வருங்காலம் பற்றியும், ஏலியின் இரு மகன்கள் இறந்து போவார்கள் என்றும் கர்த்தர் சாமுவேலிடம் சொன்னார். சாமுவேல் கர்த்தர் பேச்சைக் கேட்டுக் கொண்டார் (சாமுவேல் 3: 4-15).
நம் குழந்தைகள் கர்த்தர் கொடுத்த அரும் செல்வம். அவர்
களைப் போற்றி வளர்ப்போம். மேன்மையான உணவு, கல்வி வசதி
களைக் கொடுத்து வளர்ப்போம். நம் குழந்தைகளையும் சாமுவேலைப் போலக் கருதும் இறைவனைப் போற்றுவோம். கர்த்தர் நம் குழந்தைகளை ஆசீர்வதிப்பார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...