25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

இயேசுவின்  இரண்டாம் வருகை!

பரலோக ராஜ்யத்தைக் குறித்தும், தேவனின் வருகையைக் குறித்தும் மக்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்காக இயேசு கிறிஸ்து

இயேசுவின்  இரண்டாம் வருகை!

Published On :28 ஜனவரி 2024, 9:30 am IST

பரலோக ராஜ்யத்தைக் குறித்தும், தேவனின் வருகையைக் குறித்தும் மக்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்காக இயேசு கிறிஸ்து ஓர் உவமையைக் கூறினார்: அதாவது, பத்து கன்னிகைகள் ஒரே இடத்திலிருந்து புறப்பட்டு, மணவாளனை வரவேற்கச் செல்கின்றனர். 

அவர்களில் ஐந்து பேர் விளக்குகளுடன், எண்ணெய்யும் கொண்டு சென்றனர். மற்ற ஐந்து பேரும் விளக்குடன் எண்ணெய் கொண்டு செல்லவில்லை. மணவாளன் வர காலதாமதமானபடியால், அனைவரும் தூங்கிவிட்டனர். 
திடீரென இரவு மணவாளன் வருகிறார். உடனே அனைவரும் வேகமாகத் தயாராகின்றனர். அனைவரும் விளக்கை ஏற்றுகின்றனர். ஆனால், எண்ணெய் கொண்டு செல்லாதவர்களின் விளக்குகள் அணைந்துவிட்டன. விளக்குடன் எண்ணெய் கொண்டு சென்றவர்களின் விளக்குகள் மட்டும் எரிந்துகொண்டிருந்தன. 

யார் கைகளில் விளக்கு உள்ளதோ அவர்கள் மட்டுமே மணவாளனை வரவேற்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும். எனவே, ஐந்து பேர் மட்டுமே மணவாளனோடு சென்றனர். மற்ற ஐந்து பேரும் வெளியில் சென்று எண்ணெய் வாங்கி வரத் தாமதமானதால், அவர்களுடன் செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இந்த உவமை மத்தேயு 25:1-12 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வுவமையின் நோக்கம் என்னவென்றால், "எப்பொழுதும் விழித்திருங்கள்!' என்பதாகும். "விழித்திருப்பது மட்டுமல்லாமல் புத்திசாலித்தனமாக செயல்படவேண்டும்' என்பதை விளக்குவதற்காக இதைக் கூறியுள்ளார்.
இது இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறிக்கும் வகையில், "அவர் வரும் போது அவரை எதிர் கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும்' என்பதே முக்கியமான கருத்தாகும். 

இதில், விளக்கு என்பது நமது ஆத்துமாவை தேவனுக்குப் பிரியமானதாக வைத்திருப்பதையும், எண்ணெய் என்பது, எப்போதும் நிறைவாக தயார் நிலையில் இருப்பதையும் குறிக்கிறது. 

இவ்வாறு இருக்கும்போது, நாம் எப்போதும் ஒளிவிட்டுப் பிரகாசிப்போம். அப்போதுதான் கல்யாண வீடாகிய பரலோக ராஜ்யத்திற்குள் இயேசுவோடு பிரவேசிக்க முடியும்.

எனவே, இயேசுவோடு பரலோகம் செல்ல ஒளிவிட்டுப் பிரகாசிப்போம், நித்திய ஜீவனைச் சுதந்தரிப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.