அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

மோஜ்தபா கமேனி உயிர் பிழைக்க 90% வாய்ப்பில்லை! டிரம்ப் பரபரப்பு தகவல்!

மோஜ்தபா கமேனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று டிரம்ப் தெரிவித்திருப்பது பற்றி...

News image

அமெரிக்க அதிபர் டிரம்ப் - ஈரானிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி. - கோப்புப் படம்

Updated On :14 ஜூலை 2026, 12:24 pm IST

ஈரானின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையே உச்சகட்டப் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், ”ஹோஎமுஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்கா இனி பாதுகாப்பு அளிக்கும். ஆனால், அச்செலவினங்களுக்கு ஈடாக அவ்வழியாகக் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்” என்று டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் பேசிய டிரம்ப் தெரிவித்ததாவது:

“ஈரானின் கடற்படை, விமானப்படை என அனைத்தும் அழிந்துவிட்டன. அவர்களின் வான்வழித் தடுப்பு அமைப்புகள் செயலிழந்துவிட்டன. அவர்களின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். கமேனி இறந்துவிட்டார். மோஜ்தபா கமேனி உயிர் பிழைக்க 90 சதவிகிதம் வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.

ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி, அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் மோஜ்தபா கமேனி, புதிய தலைமை மதகுருவாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் ஒன்றில் மோஜ்தபா கமேனியும் பலத்த காயமடைந்ததாகவும், தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதன்காரணமாக, ஈரான் மற்றும் இராக்கில் கடந்த வாரம் நடைபெற்ற அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வில்கூட அவர் கலந்துகொள்ளவில்லை.

இந்த சூழலில், மோஜ்தபா கமேனி 90 சதவிகிதம் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று டிரம்ப் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Mojtaba Khamenei won't survive 90%! Trump reveals sensational information!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.