தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பழுக்காத மரத்துக்கும் பாதுகாப்பு!

வேதாகமத்தில் பல பழங்கள் பற்றி சொல்லப்பட்டாலும் அத்திப்பழம் பற்றி அநேக இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. இயற்கையாகவே வறண்ட நிலத்தில் மிகவும் செழிப்பாக வளரும் தன்மையுடையது. அரேபிய தேசத்தில் அதிகம் காணப்படு

News image
Updated On :29 ஜனவரி 2021, 7:56 am

முனைவர் தே. பால் பிரேம்குமார்

வேதாகமத்தில் பல பழங்கள் பற்றி சொல்லப்பட்டாலும் அத்திப்பழம் பற்றி அநேக இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. இயற்கையாகவே வறண்ட நிலத்தில் மிகவும் செழிப்பாக வளரும் தன்மையுடையது. அரேபிய தேசத்தில் அதிகம் காணப்படுகிறது. 

அத்தி மரத்தின் சிறப்பு பூ பூக்காது; உச்சியிலுள்ள சிறு கிளை முதல் அடிமரம் வரையில் பழங்கள் காய்த்து தொங்கும். அதற்குரிய பருவ காலத்தில் மரம் முழுவதும் பழத்தால் மூடிவிடும். அத்திமரம் பழுக்கும் பருவ காலத்தில், அத்திப் பழங்களைச் சேகரித்து, காயவைத்து, அத்திப்பழ அடைகளைச் செய்து வைத்துக்கொள்வார்கள். பெரும் செல்வந்தர் ஒருவர் மிகப்பெரிய திராட்சைத் தோட்டம் ஒன்றை வைத்திருந்தார். அங்கு உயர்தர திராட்சை வகைகள் பயிரிடப்பட்டு, பந்தல்கள் அமைத்து கொடிகள் அழகாகப் படர விடப்பட்டிருந்தன. அவற்றில் திராட்சைகள் கொத்துக் கொத்தாய்ப் பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்தன.

அந்தத் தோட்டத்தின் நடுவில் ஓர் அத்திச் செடியை நட்டு, அதனை நன்கு பராமரிக்கும்படி தோட்டக்காரனிடம் சொல்லியிருந்தார். அன்றுமுதல் தோட்டக்காரனுக்கு அந்தச் செடி செல்லச் செடியானது. குறுகிய காலத்திலேயே அது செழிப்பான மரமாக வளர்ந்தது. அதைப் பார்த்து செல்வந்தரும் மகிழ்ந்தார்.

பருவகாலம் வந்தபோது அந்த மரம் அத்திப்பழம் கொடுக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அம்மரம் கனி கொடுக்கவில்லை. அப்படியே மூன்று ஆண்டுகள் சென்றன. பருவகாலங்களில் அம்மரம் கனி காய்க்கவில்லை. செல்வந்தருக்கு அத்தி மரத்தின் மீது மிகுந்த வெறுப்பு வளர்ந்து வந்தது. தோட்டக்காரனை அழைத்தார். ""பருவ காலத்தில் இந்த மரம் கனி கொடுக்கவில்லை. அதுவுமின்றி இந்த மரத்தின் நிழல், திராட்சை கொடிகளுக்கு இடைஞ்சலாக உள்ளது. உடனே இந்த அத்தி மரத்தை வெட்டி, வெளியில் எறிந்து விடு!'' என்றார் (லூக்கா 13. 6-9).

தோட்டக்காரனுக்கோ அதை வெட்ட மனம் வரவில்லை. ""ஐயா! இந்த அத்தி மரத்தை நீங்கள்தான் நடவு செய்யக் கொடுத்தீர்கள். நான் அதை நட்டு, மிகவும் அக்கறையுடன் வளர்த்தேன். பருவ காலத்தில் கனி கொடுக்கவில்லைதான். பொறுத்துக் கொள்ளுங்கள். என் கணிப்பு, அடுத்த பருவ காலத்தில் நிச்சயம் காய் காய்த்து, கனி கொடுத்துவிடும். நானும் மரத்தைச் சுற்றி நல்ல சத்துள்ள எரு போடுவேன். இன்னும் ஓராண்டு மட்டும் பொறுத்திருங்கள். நான் வளர்த்த மரத்தை நானே எப்படி வெட்ட முடியும்? தயவுசெய்து மன்னியுங்கள்!'' என்று வேண்டி நின்றான். 

செல்வந்தரும் சற்று மனம் மாறி ""சரி..! அடுத்த பருவ காலம் வரும் வரை பார்ப்பேன்!'' என்றார். தோட்டக்காரர் மகிழ்ச்சியடைந்தார். ஆம்! பழத்தோட்டம் இவ்வுலகம். உலகின் உரிமையாளர் கர்த்தர். தோட்டக்காரர் இயேசு. 

"மனிதன் பிறருக்கு கொடுக்க வேண்டிய கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் போன்றவை'. அவற்றை நாம் தருவோம். கனி கொடாவிட்டால் வெட்டப்படுவோம் என்பதை உணர்ந்து தயவுசெய்யும் இயேசுவைப் போற்றுவோம். என்றும் இறையருள் நம்மோடு! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.