பெண்களின் வாழ்க்கையில் குரு பகவான்

குரு பகவானின் பார்வையைப் பெற்றால்தானே இந்த உலகம் தழைத்து செழித்து கொழித்து பலம் பெற முடியும்.  
Published on
Updated on
1 min read


குரு பகவான் பெண்களின் ஜாதகத்தில் பலம் பெற்று இருப்பதைக் கொண்டும், அவர் பார்வை நல்ல இடங்களுக்கு அமைவதைக் கொண்டும் (குறிப்பாக மாங்கல்ய ஸ்தானத்திற்கு குரு பகவானின் பார்வை சேர்க்கை சிறப்பு) பெண்கள் பெறும் பாக்கியங்களைக் கூறமுடிகிறது.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில்,  குரு பகவான் ஆட்சி, உச்சம் பெற்று, ஆதிபத்ய சிறப்புப் பெற்று பலம் பெற்றிருக்கும் நிலைமையின் போது, அவருக்கு அனைத்துச் சிறப்புகளும் தேடாமலேயே கிடைத்துவிடும். அவர் மாதர் குல மாணிக்கமாகத் திகழ்வார் . இதை வடமொழியில் "ஸ்த்ரீ நாம் குருபலம் ஸ்ரேஷ்டம்' என்று கூறப்படுகிறது.  தனகாரகர், புத்திரகாரகர்,பர்த்ருகாரகர் என்று அழைக்கப்படும் குரு பகவான் பெண்களுக்கு பணம், குழந்தை, வாழ்க்கைத் துணை (கணவன்) ஆகியவற்றை வழங்குகிறார்.

எல்லையற்ற பரம்பொருளின் பிரதிநிதித்துவம் பெற்ற குரு பகவானின் பார்வையைப் பெற்றால்தானே இந்த உலகம் தழைத்து செழித்து கொழித்து பலம் பெற முடியும்.  

தனது அருட்பார்வையை, பெண் ஜாதகத்தில் 5, 7, 9-ஆம் இடங்களில் பதித்து,  நல்ல கணவன் மூலம் நல்ல குழந்தைகளைக் கொடுத்து,  உலகம் போற்றும் உத்தமிகளை, உன்னத நிலைகளை உண்டாக்குகிறார்.  குரு பலத்தினால் திருமாங்கல்யத்தையும், சகல ஐஸ்வர்யங்களையும் தந்து, கெளரவம்  அளித்து தெய்வ நிலையை உண்டாக்குகிறார்.  

தர்ம சிந்தனையை வாரி வழங்கி உன்னதத் தாய் ஆக்குகிறார். உயர் பதவியை உண்டாக்கி, உற்றார் உறவினர்களின் பாராட்டுகளைத் தேடித் தருகிறார்.  யோக காரகரான குரு பகவான் தீர்க்காயுளுடன்,  சர்வ ஐஸ்வர்யங்களும், உயர்ந்த அந்தஸ்தும் உள்ள கணவனை அடைய வைக்கிறார்.  

சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்து, விசேஷமாக பலர் போற்றும் பண்பின் சிகரமாகத் திகழச் செய்கிறார்.  இல்லத்து அரசியாக்கி,  இனிய இல்லத்தின் தலைவியாக்கி, அந்த வீட்டுக்குரிய அனைத்துத் தகுதிகளையும் ஏற்படுத்தித் தருவார்.  நற்பணிகளில் ஈடுபடச் செய்து, நல்ல குணவதியாக உலகம் போற்றும் மங்கையர்க்கரசியாக ஆக்குகிறார்.  இனிய இல்லறத்தை ஏற்படுத்தி, தானும் வாழ்ந்து, தான் பெற்ற மக்களையும் வளர்த்து சமுதாயத்திற்கு நன்மை செய்ய வைக்கிறார்.

இத்தகைய அருளை வழங்கும் "பொன்னவன்' என்ற குரு பகவானை பெண்களும், அனைவரும் போற்றி வணங்கி, எல்லா வளங்களையும் பெற்று பெண் இனத்திற்குப் பெருமை சேர்ப்போம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com