உயர் குணங்களை உண்டாக்கும் குரு பகவான்!

குரு பகவான் முழு சுபக்கிரகம் ஆவார். தேவர்களுக்கு குருவானவர். நேர்மையான புனித வழியில், தியாக மனப்பான்மை, வாழ்க்கையில் கஷ்டப்படும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யும் பக்குவப்பட்ட மனம்
Published on
Updated on
1 min read


குரு பகவான் முழு சுபக்கிரகம் ஆவார். தேவர்களுக்கு குருவானவர். நேர்மையான புனித வழியில், தியாக மனப்பான்மை, வாழ்க்கையில் கஷ்டப்படும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யும் பக்குவப்பட்ட மனம், குலப் பெருமை காக்கின்ற குணம் இவையனைத்தும் இவரின் சிறந்த குணங்களாகும்.

ஜாதகத்தில் 1, 5, 9 (திரிகோணம்),  1, 4, 7, 10 (கேந்திரம்), 2, 6, 8, 11 (பணபரம்) ஆகிய இடங்களில் நட்பு, ஆட்சி, உச்சம், பரிவர்த்தனை, சந்திர பகவான் சம்பந்தப்பட்டால் பிறந்தது முதல் இறுதிவரை நீதிமானாகவும், நேர்வழியில் நடப்பவராகவும், இறைபக்தி, இறைத்தொண்டு, பெரியோர்களை மதித்து நடப்பதாகவும், சமூகத் தொண்டு, அரசு உத்தியோகத்தில் நேர்மையான முறையில் பணியாற்றுதல், அரசியல் தலைவர்கள், அதிகார அந்தஸ்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், மாநில, மத்திய அதிகார நிர்வாகத்தில் இருப்பவர்கள், மிகவும் தூய்மையான ஆட்சி நடத்தி மக்களுக்கு பல நல்ல தொண்டுகளைச் செய்து, மக்கள் மனதில் தெய்வம் போல காட்சி அளிப்பார்கள்.

ஜாதகத்தில் குரு பகவான் பலம் குறைந்து காணப்பட்டால்,  மற்ற கிரகங்கள் அதிக அளவு பலம் பெற்றிருந்தாலும் நல்லவர் என்ற குணத்தையும், நேர்வழியில் நடக்கக் கூடியவர் என்ற பெயரையும்தான் எடுக்க முடியுமே அன்றி, மேற்கூறிய சிறப்புகளை முழுமையாகப் பெற முடியாமல் போகும் என்பது அனுபவ உண்மை.

மற்றபடி, பலம் பெற்ற குரு பகவானால், ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷத்தையும் போக்கக்கூடிய அம்சம் உண்டு.  இவர் அரசாங்க கிரகம் ஆவார். சூரிய, செவ்வாய் பகவான்கள் இவர்களுடன், குரு பகவானும் பலம் பெற்றிருந்தால் அரசாங்க உத்தியோகத்தில் உயர்ந்த பதவியும், நல்ல பெயர், புகழும் அடைய முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com