பொன்மொழிகள்!

பொன்மொழிகள்!

* இறைவன் கட்டித் தங்கம் போன்றவன். அவன் திருநாமங்களோ கட்டித் தங்கத்தை உருக்கிச் செய்த அணிகலன்களைப் போன்றவை. கட்டித் தங்கத்தைக் காட்டிலும் அணிகலன்களையே மக்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.
 - பெரிய புராணம்


*பொய் சொல்பவன் வேருடன் அழிந்து போவானே! எனவே பொய் சொல்வதற்கு எனக்குத் துணிவில்லை.
-  பிரச்ன உபநிஷதம் 6.2


* குருடனுக்கு முகம் பார்க்கும் கண்ணாடியால் என்ன பயன்? அதுபோல், யமான அறிவு இல்லாதவனுக்கு சாஸ்திரங்களால் என்ன பிரயோஜனம்?
- சாணக்கிய நீதி


*மனிதர்களே! நீங்கள் நிலையுள்ளதாக இந்த மனித உடலை நம்பியிருக்கிறீர்கள். இந்த உடல் யமனுடைய ஓலை வந்து உங்களை அழைத்தால், ஓடு பெற்ற விலையையும் பெறாது.
- சிவவாக்கியார்


*விதி வலிமை வாய்ந்தது; தவறாமல் அனுபவித்து ஆக வேண்டும்; எனவே அறத்திற்கு மாறான செயல்
களைவிட்டு நீங்குதல் வேண்டும்.
- சிலப்பதிகாரம்


*இறைவா! நீங்கள் எனக்கு அதிக வெயில் காலத்தில் நிழல் தந்து காக்கக்கூடிய மரம் போன்றவர்; அந்த மரத்தின் நிழல் போன்றும் கனி போன்றும் எனக்கு 
இனிக்கக் கூடியவர்.
- வடலூர் வள்ளலார்


*அநேகர் மனதில் அகங்காரம் சிங்கம் போன்று அலைந்து திரிகிறது. இதைவிட்டுவிட்டால் மனதில் அமைதி குடி புகுந்து விடும்.
 - ராமகீதை (ஸ்ரீ ராமருக்கு அவரது குரு வசிஷ்டர் கூறிய அறிவுரை) 

*கொடிய சொற்களை ஒருபொழுதும் பயன்படுத்தாத மனிதர்களுக்கு உலகில் புகழ் கிடைக்கிறது.
 - விதுர நீதி


*இந்த உலகில் நிலையாக வாழ்பவர்கள் யார்? 
தர்மத்தைச் சார்ந்து இருப்பவன் இறந்த பின்பும் வாழ்கிறான். தர்ம சிந்தனையற்றவன் வாழும்போதே இறக்கிறான்.    
- சாணக்கியன்


*தெரிந்தும் இறைவன் நாமசங்கீர்த்தனம் செய்யாதவன் சண்டாளன், இறைவனின் நாமத்தை வெறுத்து நாமசங்கீர்த்தனம் செய்யாதவனும் சண்டாளன்  இவர்கள் மிருகங்களுக்குச் சமமானவர்கள்.
- மகான் போதேந்திரர்


*ஒருவரை வஞ்சித்துத் தேடிய செல்வம் வளர்வது போன்று தோன்றுகிறது. ஆனால் அந்தச் செல்வம் 
மிகவும் விரைவில் அழிந்து ஒழியும். 
- குமரகுருபரர்


*உணவு தூயதாக இருக்க வேண்டும். அவ்விதம் இருந்தால் மனம் பற்றின்றி, பொறாமையின்றி, மனமயக்கமின்றி பொருள்களுடன் தொடர்புகொள்ள முடியும். அப்போது மனமும் தூய்மை அடைகிறது. இதன் காரணமாக இடைவிடாத இறைவன் நினைவு மனதில் எழுகிறது.
 - சுவாமி விவேகானந்தர், ஞானதீபம் 1244, 245

தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com