தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்: மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.

News image
Updated On :4 மார்ச் 2022, 10:41 am

DIN

மீனம் ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.

மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

17.03.2022 முதல் 11.07.2022 வரை உள்ள காலகட்டத்தில் சிக்கலான சூழ்நிலையிலும் சரியான, சாதகமான முடிவுகளை எடுப்பீர்கள். ஆழ்ந்து சிந்தித்து, விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். மனக் குழப்பங்களைத் தவிர்க்க அமைதியாக இருந்து தியானம் செய்வீர்கள். கூடுமானவரையில் எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். 

நற்சிந்தனையோடு சவால்களை எதிர்கொள்வீர்கள். உங்களைத் தேடிவரும் சுபச் செய்திகளால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். எளிய மனிதர்களின் சந்திப்பும் உதவியும் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளாலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உடலாரோக்கியத்தில் இருந்த குறைகள் மறையும். அதேநேரம் பெற்றோருக்குச் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். செய்தொழிலில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் காலகட்டமாக இது அமைகிறது. 

12.07.2022 முதல் 06.02.2023 வரை உள்ள காலகட்டத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் திரும்பக் கிடைக்கப்பெறுவீர்கள். அதற்குத் தடையாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். மனதில் புது வித ஆசைகள் துளிர்விடும். 

சாமர்த்தியமான செயல்பாட்டினால் பலரின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிறையும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாட்டினையும் மேற்கொள்வீர்கள். தாய்வழி சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் நீங்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு மகிழ்ச்சியுடன் வலம் வரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 

07.02.2023 முதல் 28.11.2023 வரை உள்ள காலகட்டத்தில் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடத்தில் பெருந்தன்மையாக நடந்துகொள்வீர்கள். இதனால் உங்கள் புகழ், கெüரவம் கூடும். 

சிறிய அளவில் முதலீடுகள் செய்து பெரிய அளவில் வருமானம் ஈட்டத் தொடங்குவீர்கள். உங்கள் நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் தேடி வரும். மனதிற்குத் திருப்தி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

குடும்பத்தில் உங்கள் பெயர், அந்தஸ்து கூடினாலும் ஆர்வக்கோளாறினால் அநாவசியமான செயல்கள் எதையும் செய்யவேண்டாம். 

உடன்பிறந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வெளி வட்டாரங்களில் புது விதமான அனுபவம் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்து வந்த இழுபறிகள் குறைந்து நன்மைகள் கூடும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 

உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைத்து வேலைப்பளுவைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். 
வியாபாரிகள் கடன் வாங்குவதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. புதிய முதலீடுகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.  

விவசாயிகள் தானிய உற்பத்தியினால் நல்ல லாபம் காண்பீர்கள். கால்நடைகளைப் பராமரித்து நன்மை அடைவீர்கள். பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டிய காலமிது.  

கலைத்துறையினர் கடின முயற்சிகளின் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களால் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். வருமானம் கூடும். 

பெண்மணிகள் உடலாரோக்கியத்தில் போதிய கவனம் செலுத்தவும். கணவருடனான விவாதங்களைத் தவிர்த்து விடுங்கள். மழலை வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். 

மாணவமணிகள் சீரிய முயற்சி செய்து அதிக மதிப்பெண்களைப் பெற முனைவீர்கள். மனவலிமை அதிகரிக்க யோகா, பிராணாயாமம் போன்றவற்றை செய்து வரவும்.  

பரிகாரம்: ஸ்ரீ சிவபெருமானை வழிபட்டு வரவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.