ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்: தனுசு

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்: தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.

தனுசு ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) 

17.03.2022 முதல் 11.07.2022 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் அமைதி பூத்துக் குலுங்கும். பெற்றோர்களால் உங்களுக்கு சிறப்பான ஆதரவு தொடரும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் என்று பெரிதாக எதுவும் ஏற்படாது. போட்டியாளர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

குடும்பத்திலும் சுப காரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

முக்கியமான விஷயங்களில் முடிவுகளை எடுக்கும் போது பெரியோர்களைக் கலந்தாலோசித்து சிந்தித்து முடிவெடுக்கவும். அதேநேரம் நெடுநாளாக மனதை உறுத்திய விஷயங்களுக்கு காரணத்தைக் கண்டறிவீர்கள். புதிய முயற்சிகளில் மாற்றமான அணுகுமுறைகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். உங்களின் முழுத் திறமையைப் பயன்படுத்தி செயல்பட்டு வெற்றியடையும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 

12.07.2022 முதல் 06.02.2023 வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரம் படிப்படியாக உயரத் தொடங்கும். கடன் பிரச்னை என்று எதுவும் இருக்காது. நண்பர்கள், கூட்டாளிகளின் திறமைகளைப் புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தினரின் ஆலோசனைகள் உங்கள் மனதில் புதிய நம்பிக்கையை உருவாக்கும். மனதில் இருந்த கவலைகள் மறைந்து தெளிவுடன் காணப்படுவீர்கள். 

முகத்தில் பொலிவுடனும், நடையில் மிடுக்குடனும் வலம் வருவீர்கள். எதையும் செய்து முடிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைத்து, செய்தொழிலில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும் காலகட்டமிது. 

07.02.2023 முதல் 28.11.2023 வரை உள்ள காலகட்டத்தில் சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். புதிய வீடு, நிலம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். 

உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில் எந்தக் குறைவும் உண்டாகாது. கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அதோடு இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. 

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடுமையான பணிச்சுமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வியாபாரிகளுக்கு வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான திருப்பங்கள் உருவாகும். பழைய பாக்கிகளை வசூல் பண்ணுவதில் தாமதம் வேண்டாம். 

விவசாயிகள் கால்நடைகளின் மூலம் அதிக லாபம் ஈட்டுவீர்கள். அவைகளை நன்கு பராமரித்து வருவீர்கள். மாற்றுப் பயிர்களால் விளைச்சலைப் பெருக்குவீர்கள். லாபம் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பார்வைக்கு உட்பட்டிருப்பதால் எந்த ஒரு காரியத்திலும் அலட்சியத்தைத் தவிர்க்கவும். தொண்டர்களையும் சிறப்பாக வழிநடத்துவீர்கள்.  

கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும் நேரமிது. போட்டிகள் நிறைந்திருந்தாலும் தங்கள் திறனை நிரூபிக்க புதிய படைப்புகளை உருவாக்குவீர்கள். பரிசும் பாராட்டுகளும் கிடைக்கும். 

பெண்மணிகள் திறந்த மனதுடன் கணவர் வீட்டாருடன் அனுசரித்து பழகுங்கள். உங்கள் கனவுகள், எண்ணங்கள் அனைத்தும் சாத்தியமாகும்.  

மாணவமணிகள் வீண் பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளாமல் படிப்பு ஒன்றே குறிக்கோள் என்று இலக்கை நோக்கிப் பயணம் செய்வீர்கள். விளையாட்டிலும் வெற்றிப் பாதையை எட்டுவீர்கள். மன வலிமைக்கு யோகா, பிராணாயாமம் போன்றவற்றிலும் ஈடுபடுவீர்கள். 

பரிகாரம்: ஸ்ரீ முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com