என் ஆட்டுக்குட்டி எங்கே?

பேரரசன்  தாவிது  தன் ஆட்சி காலத்தில்  மிக பெரிய  வெற்றிகளை பெற்றான்.  இஸ்ரவேல் மக்களை  ஒன்று  சேர்த்து தன்  தேசத்தை  மகா பெரிய  தேசமாக்கி  மிக நல்ல  அரசனாக  ஆட்சி புரிந்தான்.
என் ஆட்டுக்குட்டி எங்கே?

பேரரசன்  தாவிது  தன் ஆட்சி காலத்தில்  மிக பெரிய  வெற்றிகளை பெற்றான்.  இஸ்ரவேல் மக்களை  ஒன்று  சேர்த்து தன்  தேசத்தை  மகா பெரிய  தேசமாக்கி  மிக நல்ல  அரசனாக  ஆட்சி புரிந்தான்.

பேரரசன்  தாவிது  மிக பெரிய பக்திமான்,  இசை கருவிகளை  மீட்டுகிறவன்  நல்ல குரலோடு  பக்திப் பாடல்களை பாடுவான். அவன் பாடிய  பாடல்கள்  இன்றும்  வேதாகமத்தில்  சங்கீதங்கள்  என போற்றப்படுகிறது.  

 தாவிது  பேரரசன்,  தன் அரண்மனையில்  இருக்கும்போது நாத்தான் என்ற தீர்க்கசரிசி அவனைப் பார்க்க வந்தான். "பேரரசே  உம்மிடத்தில்  ஒரு  பிரச்னைக்கு  நியாயம்  கேட்க வந்தேன்.  நீர் நீதி தவறாத  தீர்ப்பு  சொல்கிறவர். இப்பிரச்னைக்கு தீர்ப்பு சொல்லும்.  உம் நாட்டில்  ஒரு பெரிய  செல்வந்தன் மிக பெரிய வீடுகட்டி தன் மனைவி பிள்ளைகளுடன் மிக மகிழ்ச்சியாய்  வாழ்ந்து வருகிறான்.  அவனுக்கு  மிக பெரிய  ஆட்டுமந்தை  இருந்தது. அவைகள்  வெகுதிரளாக  அவனை பெரும்  செல்வந்தனாக  ஆக்கியது. 

அந்த செல்வந்தன் வீட்டிற்கு எதிரே ஒரு ஏழை ஒருவன் தன் குடும்பத்துடன்  வாழ்ந்து வந்தான்.  அவன் சிறுக சிறுக  பணம் சேர்த்து  ஒரு  ஆட்டுக்குட்டியை  வாங்கி  வளர்த்தான். 

 செல்வந்தன்  வீட்டிற்கு மாலையில்  வழிபோக்க  விருந்தாளி  ஒருவன்  வந்தான்.  இரவு தங்கி  நாளை போக வேண்டும்.  செல்வந்தன்  விருந்தாளிக்கு  கறி சமைக்க தன் பெரும் மந்தையில் இருந்து  ஒரு ஆட்டைப்பிடித்து  அடிக்க மனம் இல்லை.  

 எதிர்வீட்டு ஏழையின்  வீட்டில்  வாழும்  ஆட்டுக்குட்டியை  கண்டான்.  யாரும் பார்த்திராத வேலையில்  அந்த  ஆட்டுக்குட்டியை  பிடித்து அடித்து  கறிசமைத்து விருந்தாளிக்கு விருந்து படைத்தான்.  ஏழை மனிதனோ  தன் செல்ல ஆட்டுக்குட்டியை  தேடி தேடி  அலைந்து  கிடைக்காமல்  ஓ! என  அழுதான்.  ( கக சாமுவேல் 12)  இராஜாவே  இந்த குற்றத்துக்கு  தண்டனை என்ன?'' என்றான்  தீர்க்கதரிசி  நாத்தான்.  

பேரரசன் தாவிது  மிக கோபம்  கொண்டான்.  உடனே  அவன் தீர்ப்பு  சொன்னான்.  "ஏழையின்  ஆட்டுக்குட்டியை  பிடித்து கொன்றவன்  நிச்சயம் சாக வேண்டும்.  அவன் கொல்லப் பட வேண்டும்'' என்றான். 

தீர்க்கதரிசி,  தாவிது  ராஜாவை  பார்த்து, "சரியாய் தீர்ப்பு சொன்னீர்..  நீயே  அந்த மனிதன்.  ஏழையின்  ஆட்டுக்குட்டியை  பிடித்து கொன்று தின்றவன். உன் தீர்ப்பு  உனக்கே தீர்ப்பு''  என்றான்.

 "ராஜாவே உமது தளபதி  உரியாவின்  மனைவியைப்  பார்த்து  காமம்  கொண்டு, அவளை  உன் மனைவியாகக் கொண்டீர். அவனை எதிரிகளின்  வாலால் கொல்லப்பட செய்தீர்.  யாரும் அறியார் என நீர் எண்ணினீர். கர்த்தரே அறிவார்.  உனக்கு  இதைச் சொல்லி நியாயம்  கேட்கிறார்''  என்றான்.  

"ஐயோ!  பெரும் பாவம்  செய்தேன்.  கர்த்தருக்கு  ஏதிராக  பாவம் செய்தேன்'' என கூறி  உபவாசம்  உட்கார்ந்து  தன் பாவம்  மன்னிக்க இறைவனிடம்  வேண்டினான்.  

கர்த்தரோ அவன் மனஸ்தாபத்தை  கண்டு மன்னித்தார்.  இத்தகைய பாவம் செய்யாமல்  இருப்போம்.  இறையருள்  நம்மோடு.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com