இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

தினமணி

தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
*தர்மம் அறிந்தவன் தனக்குக் கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைந்தவனாக இருக்க வேண்டும். அவனுக்கு விதிவசமாக முனிவர்களின் உணவாகிய காய்கனி, தானியம் முதலியவை கிடைக்கும். அவற்றைக் கொண்டு அவன் நாள்தோறும் நித்திய நைமித்திகக் கிரியைகளைச் செய்ய வேண்டும்.
 - நாரதர் யுதிஷ்டிரருக்குக் கூறியது 
*எதையும் அலட்சியமாகப் பேசி, காலத்தை வீணாக்குபவன் மூடன். சல்லிக்காசைக்கூட அலட்சியமாகச் செலவு செய்பவன் ஏழை ஆகிவிடுகிறான்.
- ஹிதோபதேசம்
*முருகப்பெருமானே! மனிதர்களும் தேவர்களும் விரும்பும் உன் தரிசனத்தை அடியேன் நலமாகப் பெறுதல் வேண்டும்.
- அருணகிரிநாதர்
*எல்லா நரிகளின் ஊளையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அது போலவே எல்லா ஞானிகளின் 
உபதேசங்களின் சாரமும் ஒன்றாகவே இருக்கின்றது.
- பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் 
*ஒருவன் முன்செய்த வினைக்குத் தகுந்தபடிதான் காரியங்களைச் செய்வான். அந்த வினையின் அளவுக்கு அதிகமாக வலியதாக ஒன்றையும் செய்யமாட்டான்.
- கந்த புராணம்
*இறைவன் திருவடி ஞானஒளி மயமானது. இன்பம் என்பது ஞானத்தால்தான் உண்டாகும். ஆகவே இறைவனுடைய திருவடியைச் சேர்ந்தால் துன்ப நீக்கமும், இன்ப ஆக்கமும் உண்டாகும்.        
- அருணகிரிநாதர் 
*சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குண வடிவமான பிரகிருதிதான் உலகத்திற்குப் பிறப்பிடம். ஆனால் அதற்கு உற்பத்தியோ அழிவோ இல்லை. எப்போதும் பிரளய காலம் தொடங்கி சிருஷ்டி வரை பிரகிருதியாலயே அனைத்தும் வியாபிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர வேறொன்றுமில்லை.
-  விஷ்ணு புராணம்
*ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுதான்  இதை உறுதியாகவும் தீர்மானமாகவும் அத்வைத ஞானிகள் அனுபூதியில் உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் உலக விவகாரங்களில் ஈடுபடும்போது கனவு உலகில் சஞ்சரிப்பது போலவே நடந்து கொள்கிறார்கள்.    
-  யோகவாஷிட்டசாரம்
*ஞானம் சொல்லளவில் இருக்கும் வரையில் அமைதி ஏற்படாது. அது செயலில் இடம் பெற்றால்தான் சாந்தி கிடைக்கும்.  
-பாகவதம் தரும் நற்சிந்தனை
*நல்ல கர்மங்களால் நல்ல பிறவி கிடைத்தாலும்; இறைவன் அருள் இல்லாமல் நற்கதி கிடைப்பதில்லை.
-குருநானக்
*நாம் செய்யும் பாவம் அதை வெளியில் சொல்வதாலும், அதைக் குறித்து வருந்துவதாலும், நல்ல காரியங்கள் செய்வதாலும், தானம் கொடுப்பதாலும், தவம் செய்வதாலும் அழிகிறது. 
 - மகாபாரதம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.