நேர்மையைக் கடைப்பிடிப்பவர்கள் இந்த ராசியினர் (வாரப் பலன்கள்)

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
நேர்மையைக் கடைப்பிடிப்பவர்கள் இந்த ராசியினர் (வாரப் பலன்கள்)

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தினரும் செயல்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள்.

உடல் உபாதைகள் நீங்கிவிடும். உத்தியோகஸ்தர்களின் தடைபட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் சோர்வின்றி செயல்படுவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.  அரசியல்வாதிகள் போட்டிகளைச் சமாளிப்பார்கள்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மன நிம்மதி அடைவார்கள். பெண்களுக்கு கணவருடன் நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் முதலிடம் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - 21,22.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

மனதில் உற்சாகம் காணப்படும். குடும்பத்தில் நிம்மதி நிறையும்.  சமூகத்திலும் பெயரும் புகழும் உயரும். நேர்மையைக் கடைப்பிடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தாமதமாகும்.

வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இருக்கும் பிரச்னைகளில் அமைதி காக்கவும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்க முயற்சிப்பார்கள்.  அரசியல்வாதிகள் ஒதுங்கி நின்று செயலாற்றுவீர்கள்.

கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்து நடப்பார்கள். மாணவர்களுக்கு பழைய முயற்சிகள் கை கொடுக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்களின் கையிருப்பை பத்திரப்படுத்திக் கொள்வீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள்.  முயற்சிகள் செயல் வடிவம் பெறும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் பேச்சுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

வியாபாரிகளுக்கு புதிய கடன்கள் கிடைக்கும். விவசாயிகளுக்கு உரங்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.  அரசியல்வாதிகள் புதிய திட்டங்களைத் தீட்டுவார்கள்.

கலைத்துறையினர் வருவாய் சிறிது குறைந்து காணப்படும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் விளையாட்டில் சிறப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனக் குழப்பம் தீரும்.  குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். யோகா, தியானம் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்  கடுமையாக உழைத்து பாராட்டுகளைப் பெறுவார்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை வியாபாரம் செய்வார்கள்.

விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தில் பாசம் அதிகரிக்கும். மாணவர்கள் விடியற்காலையில் எழுந்து படித்து, ஞாபக சக்தியைக் கூட்டிக் கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் சிறப்பான லாபம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நெருக்கடியான நேரத்தில் சமயோஜித புத்தி கைகொடுக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற நற்பெயர் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் மனம் திறந்து பேசுங்கள். விவசாயிகள் மாடுகளை வாங்குவார்கள்.

அரசியல்வாதிகள் ஓய்வின்றி உழைக்க நேரிடும். கலைத்துறையினரின் கோரிக்கைகள் நிறைவேறும். பெண்கள் பிறருடன் நன்முறையில் பழகுவார்கள். மாணவர்கள் நன்கு படிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு. தொழிலில் தொய்வு ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்கள் பணியில் செம்மையாகச் செயல்படுவார்கள். வியாபாரிகள் கடையை  விரிவாக்கம்  செய்வதைத் தள்ளி வைக்கவும்.

விவசாயிகள் லாபம் அடைவார்கள். அரசியல்வாதிகள் பிறரிடம் கவனமாகப் பழகவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள்  கைகூடும். பெண்கள் பெற்றோரின் அறிவுரையை கேட்பார்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

புதிய முயற்சிகளைத் திடமாகச் செயல்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம், மன வளம் மேம்படும்.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள்  நடக்கும். வருவாய் உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு  ஊதிய உயர்வு உண்டு.

வியாபாரிகள் சிரமங்களைச் சமாளிப்பார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைத் தேடுவார்கள்.

அரசியல்வாதிகள் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வார்கள். கலைத்துறையினர் ஒப்பந்தம் மேற்கொள்ளும்போது கவனமாக இருக்கவும்.

பெண்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படும். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புனித திருத்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள்.  பண வரவு திருப்தி தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அவநம்பிக்கையானது அகன்று,  தன்னம்பிக்கை 
உயரும்.  வியாபாரிகள் பழைய கடன்களை அடைப்பீர்கள்.  விவசாயிகள் புதிய நிலங்களை வாங்க முயற்சிப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு நற்செய்தி கிடைக்கும். கலைத்துறையினரின் முயற்சி சிறிது வீணாகும்.  பெண்களுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்கள் கடும் உழைப்பால் சாதிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தொழிலில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய வருமானத்தை சரியாக முதலீடு செய்வீர்கள்.  சிறிய அளவிலான உழைப்பும் நல்ல லாபத்தைத் தரும்.

உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சலிப்படையாமல் பணிகளைச் செய்து முடிப்பார்கள்.

வியாபாரிகள் பிறருடன் கவனமாகப் பழகவும். விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிரிகளை சமாளிப்பீர்கள்.

கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். பெண்கள் இனிய தருணங்களை எதிர்நோக்கி காத்திருப்பீர்கள். மாணவர்களின் கோரிக்கை நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழிலில் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்.  உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதுக்கினிய பயணம் அமையும்.

உத்தியோகஸ்தர்கள் கடினமான வேலைகளை செய்து முடிப்பார்கள். வியாபாரிகள் புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்குவார்கள்.  விவசாயிகள் புதிய குத்திகைகளை எடுப்பார்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினரின் செயல்களில் வேகமும், ஆற்றலும் கூடும்.  பெண்கள் தனித்திறன்களை நிரூபித்து உயர்வீர்கள். 

மாணவர்கள் வெற்றிக்காகத் திட்டமிட்டு செயல்படவும்.

சந்திராஷ்டமம் -16.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் குதூகலம் நிறையும். பொருளாதார நிலை மேம்படும். அரசு சலுகைகள் கிடைக்கும்.  மருத்துவச் செலவு உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை விரைந்து முடித்துகொடுப்பீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளில் வியாபாரம் செய்வார்கள். 

விவசாயிகளின் பழைய கடன்கள் வசூலாகும். அரசியல்வாதிகள் பயணங்களை கவனமாகச் செய்யவும்.

கலைத்துறையினர் பாராட்டுகளைப் பெறுவார்கள். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை மன நிறைவைத் தரும். மாணவர்கள் பெற்றோரின் அறிவுரையைக் கேட்கவும்.

சந்திராஷ்டமம் -17,18.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழிலில் வாய்ப்புகள் குறையலாம்.  சமுதாயத்தில் கௌரவமும் அந்தஸ்தும் உயரும். வங்கிக் கடன் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரிகள் கடுமையாக உழைத்து, முன்னேற்றம் அடைவார்கள்.  விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் உயரும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பெண்கள் செலவினை  குறைத்து சேமிக்கத் தொடங்குவார்கள். மாணவர்கள் யோகா கற்பார்கள்.

சந்திராஷ்டமம்  - 19,20.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com