மகா விஷ்ணு
திருமால் உறையும் தொன்மைமிகு அபிமான, வரலாற்று, மங்களாசாசனமான கோயில்களை "விஷ்ணுபதி' என்பர். அந்தத் தலங்கள் திருமாலுக்கு உகந்த தலங்கள் என்பதலால், "பதி' என்று குறிக்கப்படுகின்றன. "பதி' என்றால் ஊர், தலைவன், அரசன், கணவன், தலைமை, இறைவன் என்ற பொருள்களும் உண்டு. இங்கு "விஷ்ணுபதி' எனும்போது "விஷ்ணுவாகிய இறைவன் உறையும் தலம்' எனப்படும்.
உலகத்துக்கும், உயிர்களுக்கும் பாதுகாவலரான ஸ்ரீ ஹரி, விஷ்ணு என்றெல்லாம் அழைக்கப்படும் திருமால் அற்புதச் செயல்களைச் செய்யும் காலம் "விஷ்ணுபதி புண்யகாலம்' .
தமிழ் மாதங்களில் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகியன பிரம்மாவுக்கும், வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகியன திருமாலுக்கும், ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகியன சிவனுக்கும் உரியவை.
பிரம்மாவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் "விஷு புண்ய காலம்'. சிவனுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் ஷடசீதி புண்ய காலம். ஏகாதசியை விட சிறப்பு விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரமான "விஷ்ணுபதி புண்ய காலம்' ஆகும். விஷ்ணுபதி பூஜையானது பாரம்பரியம் மிக்க வழிபாட்டு முறையாகும்.
விஷ்ணுபதி புண்யகாலமானது திருமாலின் அவதாரப் புராணங்களுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. ரண்யனை சம்காரம் செய்து தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்றிய, நரசிம்மரின் கோபம் தணியாமல் , தனது உக்கிரமான வடிவிலேயே இருந்த நேர, தேவர்களும் முனிவர்களும் பயந்து, லட்சுமி தேவியிடம் வேண்டினர்.
லட்சுமி சாந்தப்படுத்த ஒப்புக் கொண்டு பயபக்தியுடன் நரசிம்மத்திடம் நெருங்கினாள். லட்சுமியின் நிழல் பட்டவுடன் சாந்தமடைந்து அவள் வேண்டியபடி மடியில், கருணை வடிவமான லட்சுமி நரசிம்மனாக மாறினான். விஷ்ணுவின் இந்த செயல் நடந்த காலம் "விஷ்ணுபதி புண்யகாலம்' என கருதப்படுகிறது.
ஆடி 31}ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணி முதல் காலை 10:30 மணி வரையும், வைகாசி 1} ஆம் தேதி, கார்த்திகை 1}ஆம் தேதி, மாசி 1} ஆம் தேதிகளில் நள்ளிரவு 1.30 மணி முதல் காலை 10:30 மணி வரை விஷ்ணுபதி புண்ய காலமாகும்.
அன்று குளித்துவிட்டு அருகேயுள்ள தொன்மையான பெருமாள் கோயிலுக்கு மல்லி, ரோஜா, மனோரஞ்சிதம் போன்ற மணம் மிகுந்த மலர்களை சாற்ற எடுத்து செல்ல வேண்டும். அதோடு தனியாக 27 உதிரி மலர்களை எடுத்துச் செல்ல வேண்டும். சரம் அல்லது மாலையை சார்த்திவிட்டு பெருமாளிடம் வேண்டிக் கொண்டு, ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் கையில் இருக்கும் ஒரு பூவை காலில் படாமல் கொடிமரத்துக்கு கீழ் ஒவ்வொன்றாக வைத்து வேண்டுதலை மனதுக்குள் சொல்லிக் கொண்டு 27 முறை சுற்றி வர வேண்டும். சுற்றும்போது "ஓம் நமோ நாராயணா', "கோவிந்தா', "பெருமாளே' என்று உச்சரிக்க வேண்டும்.
இந்த நாள்களில் தீபம் ஏற்றி வழிபட்டால் பலன் அதிகமாகவும் விரைவாகவும் கிடைக்கும் என்பதால், துளசியை எடுத்துச் சென்று அர்ச்சனை செய்து தேங்காய் உடைத்து வழிபாடும் செய்வார்கள்.
விஷ்ணுவின் நாமங்களையும் மந்திரங்களையும் உச்சரித்து, திருப்பாவை, நாலாயிரம் போன்ற தோத்திரங்களையும் சொல்வார்கள். சிலர் விஷ்ணு சஹஸ்ரநாமம், விஷ்ணு அஷ்டோத்தரம், விஷ்ணு சூக்தம் போன்றவற்றைப் பாராயணம் செய்வார்கள். எளியோருக்கு உணவு, உடை தானம் செய்தல், பசுக்களுக்கு உணவு அளித்தலும் மேற்கொள்ளலாம்.
கோமாதா, ஆடு, குதிரை போன்ற அபூர்வமான பூஜைகளை விஷ்ணுபதி புண்ய காலத்தில் செய்தால் பலன் அதிகம். மீன், ஆமை, பன்றி போன்ற விலங்குகளை வழிபடுதலும், உணவிடுதலும் நன்று.
இந்த நாள்களில் வழிபடுவோரின் வாழ்வில் வறுமை நீங்கும், கடன் சுமை குறையும், செல்வ வளம் அதிகரிக்கும், குடும்ப பிரச்னைகள் நீங்கும், மோட்சம் கிடைக்கும் என்றும் வேண்டுதலோ, பூஜையோ செய்தால் பலன் தடையின்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
பூவுலக திவ்ய தேசங்கள் 106, சிங்கப்பெருமாள் கோயில் பரிக்கல் பூவரசங்குப்பம்,சிங்கிரிகுடி, பன்னுருட்டி, தாந்தோணிமலை, ஈரோடு, நாமக்கல் சேலம் போன்ற ஊர்களில் இருக்கும் தொன்ம வரலாறு உடைய கோயில்களில் வழிபடுவதால் நிச்சய பலன் உண்டு.
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட காவிரி ஆற்றின் கிளையான பழவாறு கரையின் வடக்குப் பகுதியில் "திருலோகிய மாதேவி சதுர்வேதி மங்கலம்" என்று அழைக்கப்பட்டு "திருலோக்கி' எனப்படும் கிராமத்தில் அமைந்துள்ள க்ஷீரப்தி சயனநாராயணப் பெருமாள் கோயிலில் இந்த நாள்களில் மகான்கள் வழிபட்டு செல்வதாக தல வரலாறு.
ஆகஸ்ட் 17}இல் விஷ்ணுபதி புண்ய காலமாகும்.
இரா.இரகுநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கண்கள் அடிக்கடி துடிப்பதற்கு இதுதான் காரணம்!

நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ. பன்னீா்செல்வம் முடிவு!

பிப். 13 விஷ்ணுபதி புண்ணிய காலம்!

2026-ஆம் ஆண்டு விஷ்ணுபதி புண்ணிய கால நாள்கள்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

