
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன் 14 - 20) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
தெளிந்த மனதுடன் காரியமாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். நண்பர்கள் மதிப்பு அளிப்பார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகளின் கோரிக்கைகளை மேலிடம் கருணையுடன் பரிசீலிக்கும். கலைத் துறையினர் முயற்சிகளைச் சீர்படுத்துவீர்கள். பெண்கள் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பீர்கள்.
மாணவர்கள் உற்சாக மனநிலையுடன் இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூன் 19, 20.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
கால நேரம் சாதகமாக அமையும். வழக்குகள் நல்ல முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். தியானத்தைக் கற்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் தங்களது வேலைகளைக் கச்சிதமாகச் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். விவசாயிகள் தானியங்களைப் பயிரிட்டு லாபம் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரின் பேச்சுகளுக்குப் பதிலடி தருவீர்கள். கலைத் துறையினர் வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
தொழில் பிரச்னைகளை உறுதியுடன் எதிர்கொள்வீர்கள். புதிய முறைகளைக் கையாண்டு வெற்றி அடைவீர்கள். சமுதாயத்தில் பெருந்தன்மையாக நடப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். விவசாயிகள் கடன்களை அடைப்பீர்கள்.
அரசியல்வாதிகள் தனி இடத்தைப் பிடிப்பீர்கள். கலைத் துறையினர் உயர்ந்தவர்களைச் சந்திப்பீர்கள். பெண்கள் சொத்துகளை வாங்குவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களிடம்
நட்புடன் பழகுவீர்கள்.
சந்திராஷ்டமம் -இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
தன்னம்பிக்கை வெற்றியைக் கொண்டுவந்து சேர்க்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களிடம் பிறர் முழு ஒத்துழைப்பை நல்குவார்கள். வியாபாரிகளுக்கு பயணங்களால் நன்மை உண்டாகும். விவசாயிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் பேச்சுத் திறமையை வளர்த்துகொள்வீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் பெற்றோருடன் இணக்கமாகப் பழகுவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் சாதனை புரிவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
சாதிக்கும் மன உறுதி ஏற்படும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வியாபாரிகளுக்கு புதிய முதலீடுகள் வெற்றியைத் தேடித் தரும். விவசாயிகளின் புதிய முதலீடுகள் வெற்றியைத் தரும்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவீர்கள். கலைத் துறையினர் கடன்களை அடைப்பீர்கள். பெண்கள் உறவினர்களை அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறாமல் இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
பொருளாதாரத் தடை நீங்கும். சமுதாயத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்துடன் திருத்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பேச்சை கேட்டு நடப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் விஷயம் லாபமாக அமையும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நன்மை உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத புதிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு விருதுகள் தேடி வரும். பெண்கள் கவனமாக இருக்கவும். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
சேமிப்புகளை உயர்த்துவீர்கள். சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான சூழல் நிலவும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் புதுமையை புகுத்துவீர்கள். வியாபாரிகள் கவனமாகச் செயலாற்றுவீர்கள். விவசாயிகள் புதிய பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சியில் கௌரவத்தைக் காப்பாற்றுவீர்கள். கலைத் துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். பெண்களுக்கு தந்தைவழியில் மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தை பெருக்கிக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
பொருளாதாரம் உயர்வாக இருக்கும். தொழிலில் தடைகள் நீங்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாட்டை செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். வியாபாரிகள்
போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடம் உதவிகரமாக இருக்கும். கலைத் துறையினரின் அந்தஸ்து உயரும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள். பிறரிடம் சகஜமாகப் பழகுவீர்கள். உயர்ந்தோரைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரிகள் புதிய தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள். விவசாயிகளின் இழுபறி பணிகள் நிறைவடையும்.
அரசியல்வாதிகளுக்கு சமூக நலப் பணிகளில் அனுபவம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பெண்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் பெற்றோர் பேச்சை கேட்டு நடப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். குடும்பத்தினருடன்இணக்கமாகப் பழகுவீர்கள். முகத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் கூடும். பூர்விகச் சொத்துகளில் பிரச்னைகள் தீரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து கூட்டு சேர்வீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் தேடி வரும்.
அரசியல்வாதிகளின் மீது மேலிடத்தின் நம்பிக்கை கூடும். கலைத் துறையினர் வருவாய் பெறுவீர்கள். பெண்கள் கணவர் குடும்பத்தாருடன் ஆதரவாய் இருப்பீர்கள். மாணவர்கள் நன்றாகப் படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இலலை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். வெளியூரில் இருந்து சுபச் செய்திகள் வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் மனதைப் புரிந்துகொள்வீர்கள். வியாபாரிகள் கடன்களை வசூலிப்பீர்கள். விவசாயிகள் கால்நடைகளை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளைச் சிரமமின்றி முடிப்பீர்கள். கலைத் துறையினர் புதிய யுக்திகளைக் கற்பீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூன் 14, 15, 16.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பொருளாதாரம் சீராக இருக்கும். எதிர்ப்புகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். குடும்பத்தினருடன் புனித திருத்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் புதிய இடங்களுக்குச் செல்வீர்கள். விவசாயிகளுக்கு புழு பூச்சிகளின் தொல்லை இருக்காது.
அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினர் எச்சரிக்கையாக இருக்கவும். பெண்கள் விருந்தினர் வருகையால் மகிழ்வீர்கள். மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூன் 17, 18.