வாஷிங்டன்,அக்.8: பாகிஸ்தானை பலவீனப்படுத்துவதன் மூலம் பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்த முடியும் என்று இந்தியா கருதுகிறது. ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவே உள்ளது என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இந்தியா மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
பாகிஸ்தானிற்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்தலாம் என்று கருதும் இந்தியாவின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது.
அண்டை நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடிய வகையினில் இந்தியாவினுடைய வெளிநாட்டுக் கொள்கை,பொருளாதாரக் கொள்கைகள் அமைந்துள்ளன. பாகிஸ்தானை பலவீனப்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானின் தாக்கும் திறன் குறையும் என்று இந்தியா கருதுகிறது.
ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொள்ளும் வளர்ச்சி திட்டப் பணிகளை அமெரிக்கா தலையிட்டு நிறுத்த வேண்டும். ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி தரப்படுகிறது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானையும் பாகிஸ்தானுக்கு எதிராக திருப்பலாம் என்று இந்தியா கருதுகிறது.
பாகிஸ்தானுடைய நிலைமையை அமெரிக்கா கருத்தில் கொண்டு இந்தியாவின் இத்தகைய செயல்பாடுகளை தடுக்க வேண்டும். இரு நாட்டினுடைய சுதந்திரத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கிடையே பல்வேறு சண்டைகளும், குழப்பங்களும் நீடித்தவாறே உள்ளன. இவை கண்டிப்பாக தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேஜரிவாலின் 'பி-டீம்' சிஜேபி - சுவாதி மலிவால் குற்றச்சாட்டு!

சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடிய 2 பேருக்கு பொதுவெளியில் தூக்கு தண்டனை!

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து: உயர் நீதிமன்றம்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்


